ஒரே கேட்ச் தான். ஒட்டுமொத்த ஆட்டமும் க்ளோஸ். பாகிஸ்தான் அணியின் தோல்வி – அங்கேயே கன்பார்ம் ஆயிடுச்சி

Warner
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 18-ஆவது லீக் போட்டியானது நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியானது பாகிஸ்தான் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்து தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை ருசித்தது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 367 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் 368 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 305 ரன்கள் மட்டுமே குவிந்ததால் 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரரான டேவிட் வார்னரின் கேட்சை பாகிஸ்தான் வீரர் உஸாமா மிர் தவறவிட்டது மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் எண்ணிக்கை 22 ரன்களில் இருந்தபோது டேவிட் வார்னர் 10 ரன்களில் இருக்கையில் கொடுத்த எளிதான கேட்ச்சை பாகிஸ்தான் வீரரான உஸாமா மிர் தவறவிட்டார். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய டேவிட் வார்னர் 124 பந்துகளை சந்தித்து 14 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் என 163 ரன்கள் குவித்து அசத்தினார்.

இதையும் படிங்க : இந்தியர்களே.. 400 மாஸ் சேசிங்கை பாருங்க.. ஆகாஷ் சோப்ராவிடம் சவால் விட்டு பல்ப் வாங்கிய பாக் ரசிகர்

இப்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னரின் இந்த இன்னிங்ஸ் அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது. இப்படி ஒரே கேட்சை தவறவிட்டு ஒட்டுமொத்த தோல்வியையும் உஸாமா மிர் அங்கேயே உறுதி செய்துவிட்டார். வார்னர் மட்டும் முன்கூட்டியே ஆட்டமிழந்து இருந்திருந்தால் நிச்சயம் இந்த போட்டியின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement