இந்தியர்களே.. 400 மாஸ் சேசிங்கை பாருங்க.. ஆகாஷ் சோப்ராவிடம் சவால் விட்டு பல்ப் வாங்கிய பாக் ரசிகர்

Aakash Chopra 4
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 20ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தானை 62 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா தங்களுடைய 2வது பதிவு செய்து புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மிகச் சிறப்பாக விளையாடி 368 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக துவக்க வீரர்கள் டேவிட் வார்னர் 163, மிட்சேல் மார்ஷ் 121 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தனர். மறுபுறம் பந்து வீச்சில் சுமாராகவே செயல்பட்ட பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 5, ஹரிஷ் ரவூப் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதை துரத்திய பாகிஸ்தான் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 40.5 ஓவரில் 305 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

ஸ்க்ரீன்ஷாட் எடுங்க:
அந்த அணிக்கு கேப்டன் பாபர் அசாம் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக அப்துல்லா ஷபிக் 64, இமாம்-உல்-ஹக் 70 ரன்கள் எடுத்தனர். அந்தளவுக்கு பந்து வீச்சிலும் அசத்திய ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 4 விக்கெட்களை வீழ்த்தினார். முன்னதாக இந்தியாவுக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் நடந்த கடந்த போட்டியில் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்தது.

ஆனால் அதைப் பற்றி பேசாத பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்த்தர் தங்கள் அணி அசத்திய தருணங்களில் “தில்தில் பாகிஸ்தான்” உத்வேக பாடல் ஒலிபரப்பப்படவில்லை என்று விமர்சித்திருந்தார். அந்த நிலையில் “சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் யாராவது “தில்தில் பாகிஸ்தான்” பாடலை அங்கிருக்கும் டிஜேவிடம் சொல்லி ஒலிபரப்புங்கள். ஏனெனில் பாகிஸ்தானுக்கு இங்கு விக்கெட் அவசியமாக தேவைப்படுகிறது. இந்த பிளாட்டான பிட்ச்சில் ஆஸ்திரேலியா 375+ ரன்களை செல்கிறது” என்று ட்விட்டரில் ஆகாஷ் சோப்ரா பதிவிட்டார்.

- Advertisement -

அதை பார்த்த ஒரு பாகிஸ்தான் ரசிகர் “இதே போட்டியில் 400 ரன்கள் அடித்தாலும் நாங்கள் அதை சேசிங் செய்து உலக சாதனை படைப்பது 100% உறுதி. என்னுடைய இந்த ட்வீட்டை வேண்டுமானால் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் இந்தியர்களே” என்று அவருக்கு தில்லாக பதிலடி கொடுத்தார். அதாவது இதே தொடரில் இலங்கைக்கு எதிராக 345 ரன்கள் சேசிங் செய்து உலக சாதனை படைத்தது போல் இப்போட்டியிலும் பாகிஸ்தான் சாதிக்கும் என்று அந்த ரசிகர் தெரிவித்தார்.

அதற்கு “அப்படியானால் இன்று நமக்கு அற்புதமான போட்டி காத்திருக்கிறது. ஆனால் இந்த பதிவை மட்டும் டெலீட் செய்யாதீர்கள். 400 ரன்களை செய்த பின் உங்களுக்கு இனிப்பு தருகிறேன்” என்று ஆகாஷ் சோப்ரா அந்த ரசிகருக்கு பதிலளித்தார். ஆனால் இலங்கையை விட தரமான ஆஸ்திரேலியாவிடம் கடைசியில் பாகிஸ்தானின் ஆட்டம் செல்லுபடியாகாமல் தோற்றது. அதனால் பல்ப் வாங்கி அந்த ரசிகருக்கு இனிப்பு பெண்டிங்கில் இருக்கிறது என்று ஆகாஷ் சோப்ரா மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement