அம்பயர் கொடுத்த தவறான முடிவு.. நடையை கட்ட தயாரான ரிங்கு.. தடுத்து நிறுத்தி சாதிக்க வைத்த சூரியகுமார் – நடந்தது என்ன?

Rinku-and-SKY
- Advertisement -

நேற்று செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் தனது முதலாவது அரை சதத்தை பதிவு செய்த ரிங்கு சிங் 39 பந்துகளில் ஒன்பது பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 68 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அவரது இந்த அசத்தலான ஆட்டத்திற்கு பின் சூரியகுமார் யாதவ் செய்த ஒரு உதவி இருந்தது என்றால் அது மிகையல்ல.

ஏனெனில் இந்த போட்டியின் துவக்கத்திலேயே இந்திய அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் எடுத்து திணறிய வேளையில் சூரியகுமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் அற்புதமான பாட்னர்ஷிப்பை அமைத்து விளையாடினர்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் இவர்கள் இருவர் நின்றால் மட்டுமே பெரிய ரன் குவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இருவருமே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் போட்டியின் 12-வது ஓவரை தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் வீசினார். அப்போது ரிவர்ஸ் ஸ்வீட் ஷாட் அடிக்க நினைத்த ரிங்கு சிங் அந்த பந்தை தவறவிட்டார்.

அப்படி அவர் தவறவிட்ட அந்த பந்து கால் பகுதியை தாக்கியதும் மார்க்ரம் எல்.பி முறையில் அம்பயரிடம் அவுட் கேட்க அம்பயரும் யோசிக்காமல் அவுட் என்று தனது முடிவை கொடுத்துவிட்டார். அப்போது 18 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ரிங்கு சிங் பந்து நேரடியாக தனது கால் பகுதியை தாக்கியது என்று நினைத்து அம்பயரிடம் ரிவியூ கேட்காமல் வெளியேறலாம் என்று முடிவு செய்து சிறிது தூரம் நடக்க ஆரம்பித்தார்.

- Advertisement -

ஆனால் அந்த நேரத்தில் தான் கேப்டன் சூரியகுமார் யாதவ் வந்து ரிங்கு சிங்கிடம் டி.ஆர்.எஸ் கேக்குமாறும் பந்து நிச்சயம் க்ளவுஸ் அல்லது பேட்டில் பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறி அவரை சமாதானப்படுத்தினார். இதன் காரணமாக ரிங்கு சிங் டி.ஆர்.எஸ் கேட்க மூன்றாவது அம்பயர் பரிசோதிக்கையில் பந்து கிளவுஸில் பட்டதை தெரிய வந்தது.

இதையும் படிங்க : நம்பர் ஒன் பவுலரா இருந்தாலும்.. ரவி பிஷ்னோய் நீக்கப்பட காரணம் அது தான்.. சுனில் கவாஸ்கர்

இதன் காரணமாக அவர் நாட் அவுட் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வாய்ப்பில் தப்பி பிழைத்த ரிங்கு சிங் டி20 கிரிக்கெட்டில் தனது முதலாவது அரை சதத்தை அடித்து இறுதியில் 68 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அவர் 18 ரன்களிலேயே நடையை கட்டியிருந்தால் நிச்சயம் இந்திய அணியும இவ்வளவு பெரிய ரன் குவிப்பை வழங்கியிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement