நம்பர் ஒன் பவுலரா இருந்தாலும்.. ரவி பிஷ்னோய் நீக்கப்பட காரணம் அது தான்.. சுனில் கவாஸ்கர்

Sunil Gavaskar Ravi bishnoi
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற தென்னாபிரிக்கா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2வது போட்டியில் தோல்வியை சந்தித்த காரணத்தால் இத்தொடரை குறைந்தபட்சம் சமன் செய்வதற்கு இந்தியா கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக போர்ட் எலிசபெத் நகரில் டிசம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற 2வது போட்டியில் ரவி பிஷ்னோய் விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் 9 விக்கெட்டுகளை எடுத்த அவர் தொடர் நாயகன் விருது வென்று 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

கவாஸ்கர் விளக்கம்:
மேலும் இதுவரை கிடைத்த வாய்ப்புகளில் தொடர்ச்சியாக நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் சமீபத்தில் ஐசிசி வெளியிட்ட டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் அவர் உலகின் புதிய நம்பர் ஒன் பவுலராகவும் முன்னேறி சாதனை படைத்தார். அப்படிப்பட்ட அவரை நீக்கியதற்கான காரணத்தை அணி நிர்வாகம் சொல்ல வேண்டும் என்று கௌதம் கம்பீர் போன்ற சில முன்னாள் வீரர்கள் விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில் நம்பர் ஒன் பவுலராக இருந்தாலும் எப்போதுமே சற்று வேகமாக வீசக்கூடிய ரவி பிஷ்னோய் வேகத்துக்கு சாதகமான தென்னாப்பிரிக்க மைதானங்களில் அடி வாங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதாலேயே நீக்கப்பட்டிருக்கலாம் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அந்த பிட்ச்சில் லேசான சுழல் இருந்தால் கூட ரவீந்திர ஜடேஜா எதிரணியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி விடுவார்”

- Advertisement -

“ஏனெனில் பொதுவாக சற்று ஃப்ளாட்டாக வீசக்கூடிய அவர் பேட்ஸ்மேன்கள் தன்னை இறங்கி வந்து அடிப்பதற்கான அனுமதியை எளிதில் கொடுக்க மாட்டார். எனவே களத்தில் சற்று உதவியிருந்தாலும் அவர் முழுமையாக 4 ஓவர்கள் வீசுவது இந்தியாவுக்கு முக்கியமாக அமையும். மறுபுறம் ரவி பிஷ்னோய் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் தம்முடைய காலை பதிப்பதற்காக விளையாடி வருகிறார்”

இதையும் படிங்க: மனசார மதிக்கிறேன்.. எனக்கே தெரியாம அஸ்வினை பாத்து அதை கத்துக்கிட்டேன்.. நேதன் லயன் பாராட்டு

“ஆம் அவர் உலகின் நம்பர் ஒன் பவுலர். ஆனால் பெரும்பாலான நேரங்களில் அவர் சற்று வேகமாக வீசுகிறார். எனவே இங்குள்ள பிட்ச்களில் நீங்கள் வேகமாக வீசும் போது பேட்ஸ்மேன்கள் எளிதாக அடிப்பதற்கு வாய்ப்புள்ளது. ஏனெனில் அதைத்தான் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்து இருப்பார்கள். மேலும் மழை பெய்ததால் இந்திய பவுலர்கள் கையில் சோப்பு போட்டிருந்தது போல பந்தை சரியாக பிடித்து வீசுவதற்கு தடுமாறினார்கள். சொல்லப்போனால் ஃபீல்டர்களும் பந்தை பிடிக்க தடுமாறினார்கள். அந்த வகையில் நிறைய அம்சங்கள் இந்தியாவுக்கு எதிராகவும் தென்னாப்பிரிக்காவுக்கு சாதகமாகவும் அமைந்தன” என்று கூறினார்.

Advertisement