மும்பை, வைசாக், சென்னை 3 இடங்களிலும் பட்ட அசிங்கத்திற்கு மொஹாலியில் வச்சி முற்றுப்புள்ளி வைத்த – சூரியகுமார் யாதவ்

SKY
- Advertisement -

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான சூரியகுமார் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரை அவரது புள்ளி விவரம் வருத்தத்திற்குரிய ஒன்றாகவே இருந்து வந்தது. ஏனெனில் நேற்றைய ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டிக்கு முன்னர் வரை 27 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.

அதில் வெறும் இரண்டு அரை சதங்கள் மட்டுமே அடித்து 24 ரன்கள் சராசரியை மட்டுமே வைத்திருந்தார். இதன் காரணமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது இடம் கேள்விக்குறியானது. அதோடு சூரியகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட் செட்டாக மாட்டார் என்ற ஒரு பேச்சும் பரவலாக காணப்பட்டு வந்தது.

- Advertisement -

ஆனாலும் இந்திய அணியின் நிர்வாகம் அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து 50 ஓவர் உலகக் கோப்பை அணியில் சேர்த்ததோடு மட்டுமின்றி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தற்போதைய ஒருநாள் தொடருக்கான அணியிலும் இடம் கொடுத்தது.

அந்த வகையில் முதல் இரண்டு போட்டிகளில் முன்னணி வீரர்களின் ஓய்வு காரணமாக பிளேயிங் லெவனில் தனது இடத்தை பிடித்த சூரியகுமார் யாதவ் நேற்று ஆறாவது வீரராக களமிறங்கி 49 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என ஐம்பது ரன்கள் குவித்து தனது தேர்வினை நியாயப்படுத்தினார்.

- Advertisement -

ஏற்கனவே கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது தொடர்ச்சியாக மும்பை, விசாகப்பட்டினம், சென்னை ஆகிய நகரங்களில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி மூன்று முறை அடுத்தடுத்து கோல்டன் டக்கான மோசமான சாதனையை அவர் நிகழ்த்தி இருந்தார்.

இதையும் படிங்க : IND vs AUS : அவரோட விக்கெட்டை எடுத்ததில் அலாதியான மகிழ்ச்சி – ஆட்டநாயகன் முகமது ஷமி பேட்டி

இப்படி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பட்ட அசிங்கத்திற்கு அவர்களுக்கு எதிராகவே அரைசதம் அடித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஏற்கனவே இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில் : சூரியகுமார் யாதவிடம் உள்ள திறமை காரணமாக நிச்சயம் அவரை நாங்கள் தக்கவைப்போம் என்றும் அவருக்கான வாய்ப்புகள் அவருக்கு தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement