இலங்கை அணிக்கெதிரான தொடரில் இருந்து மேலும் 2 வீரர்கள் வெளியேற்றம் – பி.சி.சி.ஐ அறிவிப்பு

Deepak
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 தொடரானது வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த வேளையில் இலங்கை அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக டி20 தொடரானது நாளை பிப்ரவரி 24-ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 27ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

Bishnoi

- Advertisement -

முதலாவது டி20 போட்டி லக்னோவிலும் அடுத்த 2 போட்டிகளும் தர்மசாலாவிலும் நடைபெற இருக்கின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளை இங்கு எளிதாக வீழ்த்தி உள்ளதால் நிச்சயம் இலங்கை அணியையும் வொயிட் வாஷ் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த இலங்கை தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த அணியில் இருந்து ரிஷப் பண்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு எடுத்துக் கொண்டனர். அதோடு கேஎல் ராகுல், அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக அவர்களும் இந்த தொடரில் பங்கேற்கவில்லை.

Sky-1

இப்படி முன்னணி வீரர்கள் பலர் இந்த தொடரில் இடம் பெறாத வேளையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியின் போது காயமடைந்த மேலும் இரு இந்திய வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி டி20 போட்டியின் போது பந்து வீசுகையில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக வெளியேறிய தீபக் சாகர் அந்த காயத்தில் இருந்து குணமடைய 5 வாரங்கள் வரை ஆகும் என்பதனால் இந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

- Advertisement -

மேலும் அவரை தொடர்ந்து தற்போது அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக வலம் வந்து கொண்டிருக்கும் சூரியகுமார் யாதவும் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவலை பிசிசிஐ பகிர்ந்து உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியின் போது பீல்டிங் செய்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது சூரியகுமார் இந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பதையும் பிசிசிஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இங்க நாம ஜெயிக்குறது முக்கியமில்ல. ரோஹித்துக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கு – விராட் கோலியின் கோச்

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் முழு வீரர்களின் பட்டியல் இதோ : 1) ரோஹித் சர்மா, 2) இஷான் கிஷன், 3) ஷ்ரேயாஸ் ஐயர், 4) ருதுராஜ் கெய்க்வாட், 5) தீபக் ஹூடா, 6) ரவீந்திர ஜடேஜா, 7) வெங்கடேஷ் ஐயர், 8) சஞ்சு சாம்சன், 9) ஆவேஷ் கான், 10) புவனேஷ்வர் குமார், 11) ஹர்ஷல் படேல், 12) பும்ரா, 13) குல்தீப் யாதவ், 14) முகமது சிராஜ், 15) ரவி பிஷ்னாய், 16) யுஸ்வேந்திர சாஹல் (காயம் காரணமாக நீக்கப்பட்ட வீரர்கள் : தீபக் சாகர், சூரியகுமார் யாதவ்)

Advertisement