அந்த 3 இந்திய வீரர்கள் வருங்கால அம்பயர்களானால் தீர்ப்பு சரியா கொடுப்பாங்க – சைமன் டௌஃபல்

Simon
- Advertisement -

கிரிக்கெட்டில் பரபரப்பான தருணங்களில் அவுட்டை தீர்மானிப்பதற்காக களத்தில் நடுவர்களாக செயல்படும் அம்பயர்கள் இரு அணிகளுக்கும் சாதகமின்றி நடுநிலையாக நின்று சரியான தீர்ப்பை வழங்குவது இன்றியமையாத கடமையாகும். ஏனெனில் அவர்கள் வழங்கும் ஒரு தவறான தீர்ப்பு கூட வெற்றியை பெறுவதற்கு தகுதியான அணிக்கு தோல்வியை பரிசளித்து விடும். அந்த அளவுக்கு கிரிக்கெட்டில் நடுவராக இருப்பது பேட்டிங் பவுலிங் செய்யும் வீரர்களை விட நுணுக்கமான அதேசமயம் கடினமான சவால் நிறைந்த வேலையாகும்.

Bucknor-3

- Advertisement -

குறிப்பாக எல்பிடபிள்யூ போன்ற தருணங்களில் நொடிப்பொழுதில் தீயாக செயல்பட்டு அவுட்டா இல்லையா என்பதை உடனடியாக வழங்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. ஆனால் அம்பயர்களும் மனிதர்கள்தான் என்ற நிலைமையில் 100% க்கு 100% அவர்களால் மிகச் சரியாக செயல்பட்டு தீர்ப்புகளை வழங்க முடியாது என்றாலும் 99% சரியான தீர்ப்பு வழங்குவது அவர்களின் கடமையாகும்.

அம்பயர் சொதப்பல்கள்:
அதன் காரணமாகவே அம்பயர்களின் தீர்ப்பே இறுதியானது என்று சர்வதேச கிரிக்கெட் வாரியமே விதிமுறை வைத்துள்ளது. இருப்பினும் அந்த விதி முறையால் கடந்த 10 – 15 வருடங்களுக்கு முன்பாக டிஆர்எஸ் எனப்படும் அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் விதிமுறை இல்லாத காலங்களில் ஸ்டீவ் பக்னர் போன்ற அம்பயர்கள் நியாயமே இல்லாமல் குருட்டுத்தனமாக குறிப்பாக இந்தியாவிற்கும் சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக வேண்டுமென்றே பலமுறை தவறான தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். சொல்லப்போனால் அந்த மோசமான அம்பயரால் மட்டுமே சச்சின் 90களில் அவுட்டாகி எப்படியும் 5 – 10 சதங்களை தவற விட்டிருப்பார்.

Sehwag

அதுபோன்ற அம்பயர்களின் அட்டகாசங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலேயே டிஆர்எஸ் முறை கொண்டுவரப்பட்டது. ஆனாலும் கூட இந்த நவீன காலத்திலும் டிஆர்எஸ் என்பதைத் தாண்டியும் பல அம்பயரிங் குளறுபடிகள் நடந்து வருவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் பெரும்பாலான போட்டிகளில் அம்பயர்கள் தாறுமாறாக தவறான தீர்ப்புகளை இஷ்டத்திற்கு வழங்கியது ரசிகர்களை கோபப்படுத்தியது.

- Advertisement -

சைமன் டௌஃபல்:
இருப்பினும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் நட்சத்திர அம்பயர் சைமன் டௌஃபல் தனது துல்லியமான தீர்ப்புகளால் அனைவரின் பாராட்டுகளைப் பெற்றவர். நடுவராக இருந்த அத்தனை போட்டிகளிலும் 100% க்கு 100% மிகச் சிறப்பான முடிவுகளை வழங்கிய அவரைதான் வரலாற்றின் மிகச் சிறந்த அம்பயர் என்று இன்றும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அதன் காரணமாகவே 2004 முதல் 2008 வரை தொடர்ந்து 5 வருடங்கள் சிறந்த அம்பயர் என்ற விருதை ஐசிசி பரிசளித்து அவரை கௌரவித்தது. தற்போது 51 வயது நிரம்பிய அவர் ஒரு கட்டத்தில் வயது தனது தீர்ப்புகளை பாதிப்பதாக உணர்ந்தால் உடனடியாக ஓய்வு பெற்ற மகத்தானவர்.

அப்படிப்பட்ட அவர் வரும் காலங்களில் இந்திய வீரர்கள் வீரேந்திர சேவாக், விராட் கோலி, அஸ்வின் ஆகியோர் அம்பயர்களாக வந்தால் துல்லியமாக தீர்ப்புகளை வழங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அம்பயரிங் செய்வதற்கு உண்மையான ஆர்வம் வேண்டும். அந்த வகையில் மோர்னி மோர்க்கல் போன்ற வீரர்களிடம் இது பற்றி நான் பேசும்போது அவர்கள் ஆர்வம் தெரிவித்தாலும் இந்த வேலை அனைவருக்கும் பொருந்தாது. ஆனால் வீரேந்திர சேவாக், ஒருவேளை விராட் கோலி அல்லது ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் அம்பயரிங் செய்தால் நான் மிகவும் விரும்புவேன். ஏனெனில் அவர்கள் களத்தில் போட்டி நடக்கும்போது போட்டியின் விதிமுறைகளைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார்கள்”

- Advertisement -

“சில வருடங்களுக்கு முன்பாக அம்பயரிங் செய்யுங்கள் என்று வீரேந்திர சேவாக்க்கு நேரடியாகவே சவால் கூட விட்டிருந்தேன். ஏனெனில் நான் அம்பரிங் செய்யும் போது ஸ்கொயர் லெக் பகுதியில் நான் நின்று கொண்டிருக்கும் போது அவர் என்னிடம் இது அவுட் அது அவுட்டில்லை என்று தெளிவாக கூறுவார். ஆனால் அம்பயரிங் செய்ய எனக்கு விருப்பமில்லை என்று அவர் கூறிவிட்டார்” என்று தெரிவித்தார்.

Ashwin

எம்சிசி தாமாக வந்து மன்கட் விதி முறையை மாற்றும் அளவுக்கு நுணுக்கம் தெரிந்து வைத்துள்ள அஸ்வின், அம்பயர்கள் தவறான தீர்ப்பு வழங்கினால் சரியாக கண்டறிந்து கொதித்தெழும் விராட் கோலி, அம்பயரிங் பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ள சேவாக் ஆகிய 3 இந்திய வீரர்கள் நடுவர்களாக தகுதியானவர்கள் என்று சைமன் டௌபல் பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க : IPL 2022 : டாஸ் வென்றால் பேட்டிங்கா? பவுலிங்கா? – அகமதாபாத் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் இதோ

தற்போது துபாயில் ஐசிசி சார்பில் நடுவர்களாக விரும்புவர்களுக்கு ஆசிரியராக ஆன்லைன் பாடங்களை எடுத்து வரும் அவர் இந்த வேலை பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “கராச்சி போன்ற பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களை தவிர எஞ்சிய அனைத்து இடங்களிலும் அம்பயரிங் செய்வது எப்போதும் அலுப்பு கொடுக்காது. ஆனாலும் அம்பயரிங் என்பது அனைவருக்கும் ஒத்து வராது. அது சவாலானது. என்னிடம் நிறைய பேர் எப்படி அவ்வளவு நேரம் கவனம் செலுத்தி நிற்கிறீர்கள் என்று கேட்பார்கள். விரும்பி செய்தால் அது ஒரு பரிசு போன்ற வேலை என்பதே எனது பதிலாகும்” என்று கூறினார்.

Advertisement