IPL 2022 : டாஸ் வென்றால் பேட்டிங்கா? பவுலிங்கா? – அகமதாபாத் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் இதோ

RRvsGT-1
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. உலகின் மிகப் பெரிய மைதானமாக பார்க்கப்படும் இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் ஒரு லட்சத்தி பத்தாயிரம் பேருக்கு மேல் நேரில் அமர்ந்து பார்க்கலாம் என்பதனால் இங்கு இறுதிப் போட்டியை நடத்த பிசிசிஐ ஏற்கனவே முடிவு செய்தது அதன்படி இன்று நடைபெறும் இந்த மாபெரும் இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன.

GTvsRR

- Advertisement -

இந்த போட்டிக்கு முன்னர் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதால் போட்டி இரவு 8 மணிக்கு துவங்குகிறது. இந்த போட்டியை காண பிசிசிஐ நிர்வாகிகளும், இந்திய பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் நேரில் வருகை புரிவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்பதனால் எந்த அணி இந்த போட்டியில் வெற்றி பெறும் என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் இறுதி போட்டி நடைபெறும் இந்த மோதிரா மைதானம் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பிட்ச் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது.

Jos Buttler vs RCB

அதன்படி இன்றைய போட்டியைக் காண ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் நேரில் வர இருப்பதனால் போட்டி முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் போட்டியின் ஆரம்பத்தில் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதனால் பவுன்ஸ் மற்றும் வேகம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக டாஸ் வெல்லும் அணி நிச்சயம் பந்துவீச்சை தீர்மானம் செய்யும். அப்படி முதலில் பந்து வீசும் அணி இப்போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று குஜராத் அணி பவர் பிளேவில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய அணியாகவும், ராஜஸ்தான் அணி பவர் பிளேவில் அதிக ரன்களை அடித்த அணியாகவும் திகழ்வதால் இரு அணிகளுக்கும் இடையே இன்றைய போட்டி பலமாக இருக்கும்.

இதையும் படிங்க : பார்த்தாலே கைகால் நடுக்கம் ! இலங்கை பவுலரின் பாக்கெட்டில் இந்திய வீரர் – இப்படியும் ஒரு சாதனையா

எது எப்படி இருப்பினும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற அணி நிச்சயம் பந்துவீச்சை தேர்வு செய்யும் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த புள்ளி விவரங்களை எல்லாம் தவிர்த்தால் நிச்சயம் சிறப்பாக விளையாடும் அணியே வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement