விராட் கோலி கீழ விழுந்தா விழட்டும்.. ஏன் அதை பண்ணீங்க.. நியூஸிலாந்து அணியை விமர்சித்த முன்னாள் ஆஸி வீரர்

Simon O'Donnell
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் முதல் செமி ஃபைனலில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. மும்பை நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி 117, ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்கள் எடுத்த உதவியுடன் 398 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை சேசிங் செய்த நியூசிலாந்துக்கு முக்கிய பேட்ஸ்மேன்கள் கைகொடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 69, டார்ல் மிட்சேல் 134 ரன்கள் எடுத்தும் 327 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்து வெளியேறியது. மறுபுறம் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி கண்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 7 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

- Advertisement -

விழுந்தா விழட்டும்:
முன்னதாக இந்த போட்டியில் மதிய நேரத்தில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு மும்பையில் நிலவிய அதிகப்படியான வெப்பத்தை தாங்க முடியாமல் சுப்மன் கில் 80* ரன்களில் இருந்த போது பாதியிலேயே வெளியேறினார். அவரைப் போலவே நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் ஒரு கட்டத்தில் களைப்படைந்து தசைப் பிடிப்பால் அவதிப்பட்டு ஓட முடியாமல் தடுமாறினார்.

அப்போது இந்திய அணியின் மருத்துவ குழுவினர் வந்து முதலுதவி செய்வதற்குள் களத்திலிருந்த சில நியூசிலாந்து வீரர்கள் விராட் கோலிக்கு சில உதவிகளை செய்தனர். இந்நிலையில் உங்கள் நாட்டை அடித்து நொறுக்கும் விராட் கோலி கீழே விழுந்தால் விழட்டும் என்று விடாமல் ஏன் உதவி செய்தீர்கள்? என்று நியூசிலாந்த அணியை முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் சைமன் ஓ’டோனல் வித்தியாசமாக சென் ரேடியோவில் விமர்சித்து பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நேற்றைய போட்டியில் இந்தியா 400 ரன்களை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது விராட் கோலி தசைப் பிடிப்பை சந்தித்த நிலையில் சில நியூஸிலாந்து வீரர்கள் அவருக்கு உதவி செய்தனர். இந்தியா 400 ரன்கள் தொடும் பாதையில் செல்லும் போது நீங்கள் ஏன் அவருக்கு உதவி செய்கிறீர்கள்? கிரிக்கெட்டின் நேர்மைத்தன்மை என்பது விதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டுமே விளையாடுவதாகும்”

இதையும் படிங்க: யூஸ் பண்ணது உண்மை தான்.. இந்தியாவுக்கு சாதகமா பிட்ச் மாற்றப்பட்டதா? விமர்சனங்களுக்கு வில்லியம்சன் பதில்

“விராட் கோலி உங்களுடைய நாட்டை அடித்து நொறுக்கும் நிலையில் நீங்கள் கைகொடுத்து தூக்க விரும்புகிறீர்கள். அந்த சமயத்தில் நீங்கள் அவரை பற்றி கவலைப்பட்டிருக்க கூடாது. மாறாக உங்களுடைய பேட்டை சென்று நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு எதிராக சிக்சர்கள் பவுண்டரி அடிப்பதை நிறுத்துங்கள் என்று அவரிடம் நீங்கள் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் உதவிய அவர் 50வது ஒருநாள் சதத்தை உங்களுக்கு எதிராக அதுவும் செமி ஃபைனலில் அடித்தார்” என்று மனிதாபிமானமின்றி கூறினார்.

Advertisement