யூஸ் பண்ணது உண்மை தான்.. இந்தியாவுக்கு சாதகமா பிட்ச் மாற்றப்பட்டதா? விமர்சனங்களுக்கு வில்லியம்சன் பதில்

Kane Willamson 2
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் 9 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றது. அதைத்தொடர்ந்து மும்பையில் நடைபெற்ற முதல் செமி ஃபைனலில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் ஐசிசி தொடரின் நாக் அவுட் சுற்றில் முதல் முறையாக தோற்கடித்த இந்தியா நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதி போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கில் 80*, விராட் கோலி 117, ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்கள் குவித்த உதவியுடன் 398 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை சேசிங் செய்த நியூசிலாந்துக்கு கேப்டன் கேன் வில்லியம்சன் 69, டார்ல் மிட்சேல் 134 ரன்கள் எடுத்த போதிலும் 327 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்து இத்தொடரிலிருந்து வெளியேறியது.

- Advertisement -

வில்லியம்சன் பதில்:
இந்த வெற்றிக்கு 7 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய முகமது ஷமி ஆட்டநாயகன் விருதை வென்றார். முன்னதாக இப்போட்டி நடைபெற்ற வான்கடே மைதானத்தை இந்தியா வெற்றி பெறுவதற்காக வேண்டுமென்றே தங்களுடைய பலமான சுழலுக்கு சாதகமாக அமைத்துக் கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக செமி ஃபைனல் எப்போதுமே புதிய பிட்ச் விளையாடப்பட வேண்டும் என்ற சூழ்நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மும்பை மைதானத்தில் மோதிய பிட்ச் மீண்டும் இப்போட்டிக்கு பயன்படுத்தப்பட்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சித்தது.

இருப்பினும் பிட்ச் விதிமுறைகளுக்கு உட்பட்டு சமமாகவே பயன்படுத்தப்படுவதாக ஐசிசி அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் இது பற்றி போட்டியின் முடிவில் கேட்ட போது பிட்ச் இதற்கு முன் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அதற்காக இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது என்று சொல்ல முடியாது என நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விமர்சனங்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் அது பயன்படுத்தப்பட்ட பிட்ச். ஆனால் நான் பார்த்த வரை அது நன்றாக இருந்தது. முதல் பகுதியில் அவர்கள் சில புற்களை அகற்றினார்கள். அதைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் இரவு நேரத்திற்கு தகுந்தாற் போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. அதை மட்டும் தான் நாங்கள் இந்த போட்டியில் பார்த்தோம். அது நல்லது. இதைத்தான் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்”

இதையும் படிங்க: 24/4 என சரிந்த தெ.ஆ.. தனி ஒருவனாக ஆஸிக்கு சவாலை கொடுத்த மில்லர்.. ஏபிடி, காலிஸ் போன்ற யாருமே படைக்காத சாதனை

“இந்தியா இப்போட்டியில் விளையாடினார்கள். நாங்கள் சற்று முன்னோக்கி சென்று சிறப்பாக விளையாட தவறினோம். கடந்த 7 வாரங்களாக நடைபெற்ற இந்த தொடரில் நாங்கள் சில தருணங்களில் சிறப்பாக விளையாட தவறியதுடன் ஒரு சிறந்த அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தோம்” என்று கூறினார். மொத்தத்தில் சுழலுக்கு சாதகமாக இந்தியா மைதானத்தை அமைத்தது என்று விமர்சனங்கள் எழுந்த அதே மைதானத்தில் இரு அணிகளும் சேர்ந்து 700+ ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement