24/4 என சரிந்த தெ.ஆ.. தனி ஒருவனாக ஆஸிக்கு சவாலை கொடுத்த மில்லர்.. ஏபிடி, காலிஸ் போன்ற யாருமே படைக்காத சாதனை

David Miller
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் நடைபெற்ற முதல் செமி ஃபைனலில் நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியா முதலாவதாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது. இதைத் தொடர்ந்து 2வது அணியை தீர்மானிக்கும் 2வது செமி ஃபைனல் நவம்பர் 16ஆம் தேதி மதியம் 2 மணிக்கு கொல்கத்தாவில் இருக்கும் உலக புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

அதில் புள்ளி பட்டியலில் 2 மற்றும் 3வது இடங்களைப் பிடித்த தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரிட்சை நடத்தின. அதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் பவுமா வழக்கம் போல ஸ்டார்க் வேகத்தில் டக் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்.

- Advertisement -

மில்லரின் வரலாறு:
ஆனால் அதிரடியாக விளையாடிக் காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட குயிண்டன் டீ காக் 3 ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த ஐடன் மார்க்ரம் 10 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார். போதாக்குறைக்கு நங்கூரமாக விளையாடக்கூடிய வேன் டெர் டுஷனும் 6 ரன்களில் அவுட்டானதால் 24/4 என ஆரம்பத்திலேயே தென்னாப்பிரிக்கா திண்டாடியது.

அந்த நிலையில் டேவிட் மில்லர் மற்றும் ஹென்றிச் கிளாஸன் ஆகியோர் நங்கூரமாக விளையாடி ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்தனர். ஆனால் அந்த ஜோடியும் 5வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது கிளாசினை 47 ரன்களில் அவுட்டாக்கிய டிராவிஸ் ஹெட் அடுத்ததாக வந்த மார்க்கோ யான்சனை கோல்டன் டக் அவுட்டாக்கினார்.

- Advertisement -

அதனால் 119/6 என மீண்டும் தடுமாறி அந்த அணிக்கு ஒருபுறம் டேவிட் மில்லர் தொடர்ந்து அரை சதம் கடந்து அசத்திய நிலையில் எதிர்ப்புறம் வந்த ஜெரால்டு கோட்சி 7வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 19 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்த மில்லர் பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்து 101 (116) ரன்கள் விளாசி அவுட்டானார். இதன் வாயிலாக ஐசிசி உலக கோப்பை வரலாற்றில் நாக் அவுட் போட்டியில் சதமடித்த முதல் தென்னாபிரிக்க வீரர் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார்.

இதையும் படிங்க: எல்லாம் அதோட எபெக்ட் தான்.. சதத்தை தவற விட்டு.. பாதியிலேயே வெளியேறியதன் காரணத்தை பகிர்ந்த கில்

இதற்கு முன் ஜேக் காலிஸ், ஏபி டீ வில்லியர்ஸ் உட்பட எந்த தென்னாப்பிரிக்க வீரரும் உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் சதமடித்ததில்லை. அத்துடன் உலகக்கோப்பை வரலாற்றில் நாக் அவுட் போட்டியில் 6வது இடத்தில் களமிறங்கி சதமடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் அவர் படைத்தார். இதில் ரபாடா 10 ரன்கள் எடுத்த போதிலும் 49.4 ஓவர்களில் தென்னாபிரிக்கா 212 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டான நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 3, ஜோஸ் ஹேசல்வுட் 2, பட் கமின்ஸ் 3, டிராவிஸ் ஹெட் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

Advertisement