ஆரம்பத்துலயே அதுல ரோஹித் சர்மா நம்ம எல்லாரையும் ஏமாத்தி ஜெயிச்சுட்டாரு.. முன்னாள் பாக் வீரர் விமர்சனம்

Sikander Bakht
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோகித் சர்மா 47, கில் 80*, விராட் கோலி 117, ஸ்ரேயாஸ் ஐயர் 105, ராகுல் 39* எடுத்த உதவியுடன் 398 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை தொடர்ந்து சேசிங் செய்த நியூசிலாந்து முடிந்தளவுக்கு போராடியும் 327 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்து இத்தொடரிலிருந்து வெளியேறியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டார்ல் மிட்சேல் சதமடித்து 134 ரன்கள், கேப்டன் கேன் வில்லியம்சன் 69 ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 7 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

ரோஹித் ஏமாத்திட்டாரு:
அதனால் ஐசிசி நாக் அவுட் போட்டியில் முதல் முறையாக நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. மேலும் 9 லீக் போட்டிகளில் வென்ற இந்தியா இதையும் சேர்த்து 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று சொந்த மண்ணில் யாரிடமும் தோற்காமல் கில்லியாக செயல்பட்டு வருவதால் 2011 போல கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போட்டி நடைபெற்ற வான்கடே கிரிக்கெட் மைதானம் முதலில் பேட்டிங் செய்தால் வெற்றி பெற அதிக வாய்ப்பை கொடுத்து வருகிறது என்பதை அனைவரும் அறிவோம். அதன் காரணமாக டாஸ் வீசும் போதே கேப்டன் ரோஹித் சர்மா ஏமாற்று வேலை செய்து வெற்றியை இந்தியாவின் பக்கம் கொண்டு வந்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் சிக்கந்தர் பக்த் பரபரப்பான வேடிக்கையான விமர்சனத்தை வைத்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் வீடியோ பதிவிட்டு பேசியுள்ளது பின்வருமாறு. “நான் உங்களுக்கு ஒரு சதி கோட்பாடு கொடுக்கலாமா? அதாவது டாஸ் நேரத்தில் ரோகித் சர்மா எந்த எதிரணி கேப்டனும் வராத தூரத்தில் நாணயத்தை வீசுகிறார். அப்போது தான் எதிரணி கேப்டன் அங்கே சென்று உண்மையாக பூ அல்லது தலையில் என்ன விழுந்தது என்பதை க்ராஸ் செக் செய்ய முடியாது என்பதற்காக அவர் அவ்வாறு செய்கிறார்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நீங்கள் கடவுளின் குழந்தை.. விராட் கோலியின் 50 ஆவது சதத்திற்கு பிறகு – அனுஷ்கா சர்மா உருக்கமான பதிவு

ஆனால் பொதுவாகவே டாஸ் வீசுவது மட்டுமே கேப்டன்களின் வேலையாகும். ஏனெனில் டாஸ் வீசிய பின் பூ அல்லது தலை ஆகியவற்றில் எது விழுந்தது? அதை எந்த கேப்டன் சரியாக கேட்டார்? என்பதை நிர்ணயித்து அவர்களுக்கான முடிவை கொடுப்பதற்காகவே களத்தில் ஐசிசி நியமித்த நடுவர் இருப்பார். அவற்றையெல்லாம் 26 டெஸ்ட், 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவருக்கு தெரியாதா என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

Advertisement