IND vs ENG : நாகரிகம் இல்லாமல் அம்பயரை ஸ்லெட்ஜிங் செய்த இங்கி வீரர் – அம்பயரின் நெத்தியடி பதில் இதோ

Stuart Broad Richard Kettleborough
- Advertisement -

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதி வரும் 5-வது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வருடம் துவங்கிய 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்த போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி கடந்த ஜூலை 1-ஆம் தேதியன்று பர்மிங்காம் நகரில் துவங்கியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் போராடி 416 ரன்கள் சேர்த்தது. ஏனெனில் புஜாரா, கில், விஹாரி, ஷ்ரேயஸ் ஐயர், விராட் கோலி என முக்கிய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்தின் தரமான பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 98/5 என இந்தியா தடுமாறியது.

அப்போது 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்திய ரிஷப் பண்ட் அதிரடியாக சதமடித்து 146 ரன்களும் அவருடன் நிதானமாக பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா சதமடித்து 104 ரன்களும் எடுத்தனர். அதைவிட கடைசி நேரத்தில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 35 ரன்களை பறக்கவிட்ட கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா உலக சாதனை படைத்தார். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து இந்தியாவின் துல்லியம் நிறைந்த அற்புதமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் 284 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

தடுமாறும் இந்தியா:
கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் உட்பட முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிக பட்சமாக அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ சதமடித்து 106 ரன்கள் குவித்தார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டும் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டும் எடுத்தனர். அதனால் 132 ரன்களை முன்னிலையாக பெற்ற இந்தியா 2-வது இன்னிங்சில் 400க்கும் மேற்பட்ட ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கில், விராட் கோலி, விகாரி, ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் 2-வது வாய்ப்பிலும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டியதால் இந்தியா தனது 2-வது இன்னிங்ஸில் வெறும் 245 ரன்களுக்கு சுருண்டது. 2-வது இன்னிங்சில் அதிகபட்சமாக பொறுப்பை உணர்ந்து அனுபவத்தைக் காட்டிய புஜாரா அரைசதம் அடித்து 66 ரன்களும் ரிஷப் பண்ட் 57 ரன்கள் குவித்து போராடி ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 378 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து ஒரு கட்டத்தில் தொடக்க வீரர்களின் அதிரடியால் 100/0 என்ற நிலைமையில் அச்சுறுத்தியது. அந்த சமயத்தில் அடுத்தடுத்த 3 விக்கெட்டுகள் எடுத்த இந்தியா பதிலடி கொடுத்தது.

- Advertisement -

அம்பயருடன் ஸ்லெட்ஜிங்:
ஆனாலும் அதன்பின் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் 76* ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 72* ரன்களும் எடுத்துள்ளதால் 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 259/3 என்ற நல்ல நிலைமையில் உள்ள இங்கிலாந்துக்கு கடைசி நாளில் வெற்றி பெற 100 ஓவர்களில் வெறும் 119 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. ஆனால் வெற்றிக்கு 7 விக்கெட் தேவைப்படுவதால் ட்ராவும் செய்ய முடியாத நிலைமையில் இப்போட்டியில் இந்தியாவின் வெற்றி தலைகீழாக மாறி கேள்விக்குறியாகியுள்ளது. முன்னதாக இப்போட்டியில் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் ஸ்லெட்ஜிங் எனப்படும் வார்த்தை மோதல்களில் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது.

குறிப்பாக மெதுவாக பேட்டிங் செய்து கொண்டிருந்த தம்மை விராட் கோலி ஸ்லெட்ஜிங் செய்ததால் தீயாக பற்றிய ஜானி பேர்ஸ்டோ சதமடித்து பதிலடி கொடுத்தார். ஆனால் இப்போட்டியில் இங்கிலாந்துக்காக விளையாடும் ஸ்டூவர்ட் பிராட் அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது யாருமே எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளது. ஆம் பரபரப்பாக நடைபெறும் இப்போட்டியின் 3-வது நாளில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்சில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது கடைசி நேரத்தில் களமிறங்கிய ஸ்டூவர்ட் பிராட் தனது ஓவரில் 35 ரன்களை பறக்கவிட்ட ஜஸ்பிரித் பும்ராவை பதிலுக்கு பேட்டிங்கில் அடிக்க முயற்சித்தார்.

- Advertisement -

நெத்தியடி பதில்:
ஆனால் அதற்கு வளைந்து கொடுக்காத ஜஸ்பிரித் பும்ரா துல்லியமான பவுன்சர் மற்றும் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி திணறடித்தார். அதனால் கடுப்பான ஸ்டூவர்ட் பிராட் உடனடியாக அம்பயரை பார்த்து அதிகப்படியான பவுன்சர்கள் வீசும் பும்ராவை எச்சரிக்குமாறு கூறினார். ஆனால் பும்ரா விதிமுறைகளுக்கு உட்பட்டே பந்து வீசியதால் அம்பயர் எதுவும் சொல்லவில்லை. அதனால் அதிருப்தியடைந்த ஸ்டூவர்ட் பிராட் அம்பயரிடம் கோபமாக சில வார்த்தைகளை பிரயோகித்தார்.

இதையும் படிங்க : IND vs ENG : அவர்களது அந்த வலையில் சிக்கிவிட்டோம், சுமாரான பேட்டிங் – தோல்வியை ஒப்புக்கொண்ட இந்தியா

அதனால் கோபமடைந்த அம்பயர் ரிச்சர்ட் கெட்டல்போர்க் நெத்தியடியாக கொடுத்த பதில் ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. அவரின் பதிலடி இதோ. “நாங்கள் அம்பயரிங் செய்வோம், நீங்கள் பேட்டிங் மட்டும் செய்யுங்கள், சரியா?. இல்லாவிட்டால் நீங்கள் மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும். ஓவருக்கு ஒன்று (பவுன்சர்). எனவே வாயை மூடிக்கொண்டு பேட்டிங் மட்டும் செய்யுங்கள்” என்று கூறியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement