WTC Final : சுப்மன் கில் ஐபிஎல்’ல வேணா அசத்தலாம், ஆனா தரமான எங்ககிட்ட ஆட்டம் போட முடியாது – முன்னாள் ஆஸி வீரர் அதிரடி

Shubman Gill Vs Starc
- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது சாம்பியனை தேர்ந்தெடுக்கும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்து லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா 2வது இடம் பிடித்த இந்தியாவை எதிர்கொள்கிறது. இப்போட்டிக்கு முதல் முறையாக தகுதி பெற்றுள்ள ஆஸ்திரேலியா ஏற்கனவே 5 உலகக் கோப்பைகளை வென்றது போலவே இந்த கோப்பையையும் முதல் முயற்சியிலேயே வென்று சாதனை படைக்க முயற்சிக்கவுள்ளது. மறுபுறம் கடந்த ஃபைனலில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியிலிருந்து பாடத்தை கற்றுள்ள இந்தியா இம்முறை சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைக்க போராட உள்ளது.

- Advertisement -

இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை விட சுப்மன் கில் ஆஸ்திரேலியாவுக்கு சவாலாக இருந்து இந்தியாவின் வெற்றிக்கு போராடுவார் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஏனெனில் 2018 அண்டர் 19 உலககோப்பை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருது வென்று சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் 2021இல் ஆஸ்திரேலிய மண்ணில் பதிவு செய்த மறக்க முடியாத காபா வெற்றியில் 91 ரன்கள் விளாசினார். மேலும் கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் முதல் வருடத்திலேயே கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் இந்த வருடம் 890 ரன்களை விளாசி ஆரஞ்சு தொப்பியை வென்று ஃபைனல் வரை செல்வதற்கு உதவினார்.

சவாலான ஆஸ்திரேலியா:
அதற்கிடையே ஒருநாள், டி20 போட்டிகளில் இரட்டை சதமும் சதமும் அடித்த அவர் கடைசியாக ஆஸ்திரேலியாவை அகமதாபாத் மைதானத்தில் எதிர்கொண்ட போட்டியில் சதமடித்து உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் அசத்தலாக செயல்பட்ட சுப்மன் கில் தரமானவர் என்றாலும் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் இந்த ஃபைனலில் தடுமாறுவதற்கு வாய்ப்புள்ளதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் சேப்பல் கூறியுள்ளார். குறிப்பாக ஸ்டார்க், ஹேசல்வுட் போன்ற ஏதோ ஒரு பவுலரிடம் நிச்சயமாக கில் திணறுவார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Shubman-Gill

“நான் அதிக விவரங்களை சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் பார்த்தது போலவே ஆஸ்திரேலியர்களும் அவருடைய சில பலவீனங்களை பார்த்திருப்பார்கள் என்று நம்புகிறேன். குறிப்பாக சுப்மன் கில் தன்னுடைய இன்னிங்ஸில் ஆரம்பத்தில் செய்யும் சில விஷயங்கள் அவர் தடுமாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது. அதாவது பந்து சற்று எக்ஸ்ட்ராவாக பவுன்ஸ் ஆகும் பட்சத்தில் ஆஃப் ஸ்டம்ப் லென்த்தில் நீங்கள் வீசும் போது அவர் விக்கெட்டுக்கு பின்னால் எட்ஜ் கொடுக்க வாய்ப்புள்ளது”

- Advertisement -

“இருப்பினும் அவர் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. அதனால் ஆஸ்திரேலியா சிறப்பாக பந்து வீசாமல் போனால் அவர் அதற்காக தண்டித்து விடுவார். கில் இதற்கு முன் இங்கிலாந்து மண்ணில் விளையாடியிருந்தாலும் மற்றவர்களைப் போல் ஆஸ்திரேலியா சிறப்பாக பந்து வீசும் போது நிச்சயமாக தடுமாறுவார். குறிப்பாக சற்று எக்ஸ்ட்ரா வேகத்தை பெறும் மிட்சேல் ஸ்டார்க் போன்ற பவுலர்கள் நிச்சயமாக அவரை திணறடிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர் வீசும் வேகம் எந்த பேட்ஸ்மேனையும் தடுமாற வைக்கும். பொதுவாகவே நல்ல வீரர்களையும் எக்ஸ்ட்ரா வேகம் அவுட்டாக்கும்”

Greg-Chappell

“அதே போல் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் தரமான வீரர்களை அவுட்டாக்கும். அதை வீசக்கூடிய ஜோஸ் ஹேசல்வுட் இந்த ஃபைனலில் ஃபிட்டாகி விளையாடினால் நிச்சயமாக அது கில்லுக்கு பிரச்சனையாக இருக்கும். ஒருவேளை ஹேசல்வுட் விளையாடாமல் போனால் அவருக்கு பதிலாக வாய்ப்பு பெறும் போலண்ட் நிச்சயமாக கில் போன்ற அனைவரையும் திணறடிக்கும் திறமை கொண்டவர்”

இதையும் படிங்க:ஒன்றரை ஆண்டுகள் கழித்து இந்திய அணியில் விளையாடப்போவது குறித்து பேசிய ரஹானே – என்னவெல்லாம் சொல்லியிருக்காரு பாருங்க

“ஏனெனில் நல்ல லைனில் வீசும் திறமை கொண்ட அவர் இங்கிலாந்து சூழ்நிலைகளில் எந்த லென்த்தை பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிவார்” என்று கூறினார். அதாவது சுப்மன் கில் 2 பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டாலும் தரமான வேகப்பந்து வீச்சு கூட்டணியை கொண்டுள்ள ஆஸ்திரேலியாவின் ஏதோ ஒரு பவுலரிடம் தடுமாறுவதற்கு வாய்ப்புள்ளதாக கிரேக் செப்பல் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement