ஒன்றரை ஆண்டுகள் கழித்து இந்திய அணியில் விளையாடப்போவது குறித்து பேசிய ரஹானே – என்னவெல்லாம் சொல்லியிருக்காரு பாருங்க

Rahane
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரரான அஜின்க்யா ரஹானே கடைசியா தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடருடன் மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார். அதன் பிறகு எந்த ஒரு டெஸ்ட் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக அறிமுகமாகிய ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அதோடு அஜின்க்யா ரஹானேவின் கிரிக்கெட் கரியர் முடிவுக்கு வந்ததாக பார்க்கப்பட்டது.

Rahane-1

- Advertisement -

அதேபோன்று அந்த நேரத்தில் பிசிசிஐ வெளியிட்ட வருடாந்திர ஒப்பந்த பட்டியலிலும் ரகானேவின் பெயர் நீக்கப்பட்டு இருந்ததால் அவரது கரியர் இதோடு முடிவுக்கு வந்ததாகவே கருதப்பட்டது. ஆனாலும் தனது விடாமுயற்சியை கைவிடாத ரகானே தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்ததோடு மட்டுமின்றி ரஞ்சி டிராபி என தான் பங்கேற்ற அனைத்து போட்டிகளுமே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக தனது அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் இன்னும் தனக்குள் கிரிக்கெட் கரியர் மீதம் இருக்கிறது என்பதை வெளிகாட்டினார். அவரது இந்த தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடுகள் காரணமாக தற்போது ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார்.

Rahane CSK

இப்படி 18 மாதங்கள் கழித்து இந்திய அணியில் கம்பேக் கொடுத்துள்ள அவர் நீண்ட மாதங்கள் கழித்து இந்திய அணிக்காக விளையாட இருப்பது குறித்து நெகிழ்ச்சியான சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : நான் இந்திய அணிக்கு திரும்பவும் வந்தது மிகவும் உணர்ச்சிகரமாக உள்ளது. நான் அணியிலிருந்து நீக்கப்பட்டபோது என்னுடைய குடும்பத்தினர் மிகவும் உறுதுணையாக நின்றார்கள். அதன் பிறகு என்னுடைய யுக்திகளை நான் மாற்றினேன்.

- Advertisement -

எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் 100% பங்களிப்பை வழங்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில் நான் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அது ஐபிஎல் ஆக இருந்தாலும் சரி, உள்ளூர் போட்டிகளாக இருந்தாலும் சரி அனைத்திலுமே என்னுடைய பெஸ்ட்டை வழங்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில் மிகவும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் இந்திய அணியில் இணைந்தது நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது.

இதையும் படிங்க : SL vs AFG : அறிமுக ஒருநாள் போட்டியிலேயே மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மதீஷா பதிரானா – அதிலும் இதை பாத்தீங்களா?

சென்னை அணிக்காக கோப்பையை வென்ற அணியில் நான் இருந்தது மிகவும் மகிழ்ச்சி. தோனிக்காக நாங்கள் இதனை செய்துள்ளோம். சி எஸ் கே அணியுடன் நிறைய நேரத்தை செலவிட்டதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் வேளையில் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் என்னால் முடிந்த 100% பங்களிப்பை வழங்க தயாராக இருக்கிறேன் என அஜின்க்யா ரஹானே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement