SL vs AFG : அறிமுக ஒருநாள் போட்டியிலேயே மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மதீஷா பதிரானா – அதிலும் இதை பாத்தீங்களா?

Matheesha-Pathirana
- Advertisement -

இலங்கை கிரிக்கெட் அணியானது தற்போது தங்களது சொந்த நாட்டில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. அதன்படி கடந்த ஜூன் 2-ஆம் தேதி நடைபெற்று முடிந்த இந்த முதலாவது ஒருநாள் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. இந்த வெற்றியின் மூலம் தற்போது ஆப்கானிஸ்தான் அணி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Pathirana

- Advertisement -

அடுத்து வரும் இரு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட முதல் முறையாக இலங்கை மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றி ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சாதனை படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வளர்ந்து வரும் அணியான ஆப்கானிஸ்தான் அணியிடமே இலங்கை அணி தோல்வியை சந்தித்தது அந்த அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு இந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்த மதீஷா பதிரானாவுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் சிஎஸ்கே அணியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்த அவர் இந்த போட்டியிலும் அசத்தலாக பந்து விசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Pathirana 1

ஆனால் இந்த போட்டியில் அவரது மோசமான பந்துவீச்சு ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் முதலாவதாக விளையாடிய இலங்கை அணி 50 ஓவர்களின் முடிவில் 268 ரன்கள் குவிக்க அதன் பின்னர் 269 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது 46.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 269 குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இலங்கை அணி சார்பாக அறிமுகமாகி பந்துவீசிய மதீஷா பதிரானா 8.5 ஓவர்கள் மட்டுமே வீசி 66 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். அவரது இந்த மோசமான பந்துவீச்சு அனைவரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்தது. அதிலும் குறிப்பாக பதிரானா 16 வொயிடு பந்துகளை வீசி சொதப்பியிருந்தார்.

இதையும் படிங்க : டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கான விக்கெட் கீப்பர் யார்? இஷான் கிஷனா? கே.எஸ்.பார்த்தா? – ரவி சாஸ்திரி அளித்த பதில்

முதல் மூன்று ஓவர்களில் 7 வொயிடுகளை வீசிய அவர் அடுத்த ஐந்து ஓவர்களில் 9 வொயிடுகள் என மொத்தமாக 16 வொயிடுகளை வீசி சொதப்பியிருந்தார். சிஎஸ்கே அணியில் அற்புதமாக செயல்பட்ட அவர் இப்படி இலங்கை அணிக்காக அறிமுகமான முதல் ஒருநாள் போட்டியிலேயே மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியது அனைவரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement