டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கான விக்கெட் கீப்பர் யார்? இஷான் கிஷனா? கே.எஸ்.பார்த்தா? – ரவி சாஸ்திரி அளித்த பதில்

Ravi-Shastri
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் ஜூன் 7-ம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறயிருக்கும் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

IND vs AUS

- Advertisement -

ஏனெனில் கடந்த 2013-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி எந்தவொரு ஐ.சி.சி கோப்பையும் கைப்பற்றவில்லை என்கிற குறையை போக்க நல்ல ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதால் இந்த போட்டியில் வெற்றி பெற்று ஐசிசி கோப்பை கைப்பற்ற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதேவேளையில் இந்திய அணியை வீழ்த்தி முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல ஆஸ்திரேலிய அணியும் தயாராகி வருகிறது.

எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது அனைவரது மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் இளம் வீரர்கள் இஷான் கிஷன் மற்றும் கே.எஸ் பரத் ஆகியோர் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இந்த இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? என்பது குறித்த கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

KS-Bharat

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில் : இந்திய அணி கடந்த முறை நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் தோல்வி அடைந்ததிலிருந்து ஒரே ஒரு பாடத்தை தான் நாங்கள் கற்றிருக்க வேண்டும். அதாவது ஆடுகளத்திற்கு ஏற்ப நாம் சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்திருக்க வேண்டும்.

- Advertisement -

கடந்த முறை நாம் இரண்டு ஸ்பின்னர்களுடன் விளையாடியது நமக்கு பாதகமாக அமைந்தது. ஆனால் இம்முறை அப்படி கிடையாது மைதானத்தின் தன்மையை முன்கூட்டியே கணித்து அதற்கு ஏற்றார் போல் அணியை தேர்வு செய்யும் சுதந்திரம் நம்மிடம் உள்ளது. இதன் காரணமாக மைதானம் எப்படி செயல்படுகிறதோ அதற்கு ஏற்ப வீரர்களை தேர்வு செய்யலாம். அப்படி வீரர்களை தேர்வு செய்யும்போது ஒருவேளை நாம் இரண்டு ஸ்பின்னர்களுடன் செல்ல வேண்டிய சூழலில் ஏற்பட்டால் :

இதையும் படிங்க : ஜாம்பவானாக வர எனக்கு கிடைச்ச அந்த சப்போர்ட் அர்ஜுனுக்கு கிடைக்க வைப்பேன் – சச்சின் டெண்டுல்கர் உறுதி

கே எஸ் பரத்தை தான் விக்கெட் கீப்பராக அணியில் சேர்க்க வேண்டும். அதுவே நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னர் என மாறுபட்ட கலவையில் நாம் களமிறங்கினால் அப்போது இஷான் கிஷனுக்கு தான் நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என வித்தியாசமான பதிலை ரவி சாஸ்திரி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement