ஜாம்பவானாக வர எனக்கு கிடைச்ச அந்த சப்போர்ட் அர்ஜுனுக்கு கிடைக்க வைப்பேன் – சச்சின் டெண்டுல்கர் உறுதி

Arjun-Tendulkar-1
- Advertisement -

கோடைகலமாக நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 6வது கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் சுற்றுடன் வெளியேறியது. இருப்பினும் ஜஸ்பிரித் பும்ராபோன்றவர்கள் காயத்தால் வெளியேறியதால் ஒரு வழியாக அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமானார். இந்தியாவுக்கு ஏராளமான சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து கிரிக்கெட்டின் கடவுளாக போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் தம்முடைய மகன் இடது கை வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக உருவாக விரும்பினார். அதனால் சிறு வயது முதலே தனது தந்தையின் ஆதரவுடன் பல நட்சத்திர வீரர்களின் மேற்பார்வையில் வளரத் தொடங்கிய அர்ஜுன் கடந்த சில வருடங்களாக மும்பை அணியில் நெட் பவுலராக செயல்பட்டார்.

PBKS vs MI Arjun tendulkar

- Advertisement -

அந்த நிலையில் கடந்த வருடம் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து லீக் சுற்றுடன் வெளியேறியதால் கடைசிக்கட்ட போட்டிகளில் வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவரை “ஜாம்பவான் மகன் என்பதால் விரைவாக வந்து விட்டார்” என்ற விமர்சனங்களை தவிர்ப்பதற்காக மும்பை நிர்வாகம் அலைக்கழித்தது. இருப்பினும் கடந்த ரஞ்சிக்கோப்பையில் கோவா அணிக்காக விளையாடி முதல் முறையாக சதமடித்து அனுபவத்தை பெற்றதால் இந்த வருடம் வாய்ப்பு பெற்ற அர்ஜுன் 120 – 130 கி.மீ என்ற மிதவேகத்திலேயே வீசினார்.

சச்சின் உறுதி:
அதனால் அடி வாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் பஞ்சாப்புக்கு எதிராக ஒரே ஓவரில் 31 ரன்களை வாரி வழங்கி மோசமான சாதனை படைத்தார். அதனால் இனிமேலும் வாய்ப்பு கொடுத்தால் பிளே ஆப் செல்ல முடியாது என்று கருதியை மும்பை நிர்வாகம் அத்தோடு வாய்ப்பை நிறுத்தி விட்டது. மேலும் அவருடைய பவுலிங், ஆக்சன் வேகம் என எதுவுமே சரியில்லை என்றும் கடினமாக உழைத்துப் பயிற்சிகளை எடுக்காமல் போனால் நிலைத்து நின்று சச்சினின் பெயரை காப்பாற்ற முடியாது என நிறைய விமர்சனங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் விமர்சனங்களை தாண்டி சுதந்திரமாக விளையாடுவதற்கு தேவையான ஆதரவை அர்ஜுனுக்கு பெற்றுக் கொடுப்பேன் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தமது இளம் வயதில் அப்பா, அம்மா முதல் சகோதரர்கள் வரை கிரிக்கெட்டில் முழுமையாக கவனம் செலுத்தி விளையாடுவதற்கு கொடுத்த ஆதரவை தாமும் அர்ஜுனுக்கு கொடுக்க உள்ளதாக உறுதிப்பட தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “நான் எனது குடும்பத்திலிருந்து ஆதரவை பெற்றேன். என்னுடைய அண்ணன் அஜித் டெண்டுல்கர் எனக்கான வழியை கண்டுபிடித்து கொடுத்தார். என்னுடைய சகோதரர் நித்தின் டெண்டுல்கர் பிறந்தநாளில் என்னுடைய ஓவியத்தை வரைந்து ஆதரவு கொடுத்தார். என்னுடைய அம்மா எல்ஐசியில் பணிபுரிய என்னுடைய அப்பா பேராசிரியராக பணியாற்றினார்”

- Advertisement -

“அந்த வகையில் அவர்கள் அனைவரும் எனக்கு முழுமையான சுதந்திரத்தை கொடுத்தனர். அதே போல அனைத்து பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைக்கு தேவையான சுதந்திரத்தை கொடுக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். எனக்கு கிடைத்த சூழ்நிலையை எனது மகனுக்கும் உருவாக்க முயற்சிக்கிறேன். ஏனெனில் உங்களை நீங்களே பாராட்டும் போது அனைவரும் பாராட்ட துவங்குவார்கள். மேலும் உன்னுடைய விளையாட்டுக்கு கவனம் கொடு என்று எனக்கு என்னுடைய தந்தை சொன்ன வார்த்தைகளை தற்போது நான் அர்ஜுனுக்கு சொல்கிறேன்”

Arjun-Tendulkar

“நான் ஓய்வு பெற்ற போது ஊடகங்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். அந்த சமயத்தில் கிரிக்கெட்டை விரும்புவதற்கு தேவையான இடைவெளியை அர்ஜுனுக்கு கொடுக்குமாறு நான் ஊடகங்களிடம் கேட்டுக் கொண்டேன். அதனால் அர்ஜுன் எந்த விதமான அழுத்தங்களும் இல்லாமல் சுதந்திரமாக விளையாடுவதற்கு ஆதரவு கொடுத்த செய்தியாளர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் பெரிய அளவில் வருவதற்கு என்னுடைய குடும்பம் உறுதுணையாக இருந்தது”

இதையும் படிங்க:2011 உலக கோப்பை வென்ற இந்திய அணியை விட 2007 டீம் தான் சிறந்தது – சேவாக் சொல்லும் காரணம் என்ன

“குறிப்பாக ஆஸ்திரேலிய தொடரில் நான் அதிக காயத்தை சந்தித்ததால் 2 கால்களிலும் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு வந்த அஞ்சலி அந்த அறுவை சிகிச்சையை ரத்து செய்தார். இருப்பினும் காயத்தால் அவதிப்பட்ட என் மீது அஞ்சலி அதிகப்படியான அக்கறையை எடுத்துக் கொண்டார்” என்று கூறினார்.

Advertisement