விராட், ரோஹித் இல்ல.. அவர் தான் ஃபைனலில் இந்தியாவுக்கு டாப் ஸ்கோர் அடிப்பாரு.. ஹர்பஜன் கணிப்பு

Harbhajan Singh
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. அதில் லீக் மற்றும் அரையிறுதி சுற்றில் வெற்றி கண்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. அந்த போட்டியில் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்ற அனுபவமிகுந்த ஆஸ்திரேலியா இம்முறை இந்தியாவை சொந்த மண்ணில் தோற்கடித்து 6வது கோப்பையை வெல்வதற்காக களமிறங்க உள்ளது.

மறுபுறம் 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இம்முறை 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது. அத்துடன் 2003 கோப்பை ஃபைனல் மற்றும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் ஆகிய தோல்விகளுக்கு ஆஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கும் இந்தியா தயாராகி வருகிறது.

- Advertisement -

ஹர்பஜன் கணிப்பு:
இந்த போட்டியை பொறுத்த வரை இந்திய அணிக்கு பேட்டிங் துறையில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்களுடைய அனுபவத்தை பயன்படுத்தி ஆஸ்திரலியாவுக்கு சவாலை கொடுத்து பெரிய ரன்கள் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமக்கு மிகவும் பிடித்த அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் ரோஹித் மற்றும் விராட் கோலியை விட சுப்மன் கில் தான் அதிக ரன்களை அடிப்பார் என்று ஹர்பஜன் சிங் கணித்துள்ளார்.

அதாவது அகமதாபாத் மைதானத்தில் ஐபிஎல், டி20, டெஸ்ட் ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சதங்கள் அடித்துள்ள கில் அம்மைதானத்தை தம்முடைய கோட்டையாக வைத்துள்ளார். எனவே மீண்டும் அந்த மைதானத்தில் கில் அசத்துவார் என்று தெரிவிக்கும் ஹர்பஜன் இது பற்றி பேசியது பின்வருமாறு. “விராட் கோலி மற்றும் முகமது ஷமி ஆகியோர் நம்ப முடியாத அளவுக்கு ஒவ்வொரு போட்டியிலும் அசத்தி வருகின்றனர்”

- Advertisement -

“இது சுப்மன் கில்லுக்கு மிகவும் பிடித்த மைதானமாகும். அவர் எப்போதுமே அகமதாபாத்தில் ரன்கள் அடிக்க விரும்புவார். அவர் ஐபிஎல் ஃபைனலில் அதிக ரன்கள் அடிப்பார் என்று நான் கணித்திருந்தேன். தற்சமயத்தில் இந்தியா பயமற்ற கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. இருப்பினும் ஃபைனல் என்பது எப்போதுமே அழுத்தமான போட்டியாக இருக்கும். அதில் யார் அழுத்தத்தை கையாள்கிறார்களோ அவர்கள் வெற்றி காண்பார்கள்”

இதையும் படிங்க: இந்தியா – ஆஸி மாபெரும் ஃபைனலில் வெல்லப்போவது யார்? வரலாறு சொல்வது என்ன.. விரிவான அலசல்

“ஆஸ்திரேலியா 2003, 2007, 2015 உலகக் கோப்பைகளை அனைத்து வீரர்களும் ஒன்றாக இணைந்து அசத்தியதன் காரணமாக எளிதாக வென்றது” என்று கூறினார். இருப்பினும் இதே தொடரின் லீக் சுற்றில் 200 ரன்களை துரத்தும் போது 2/3 என்று சரிந்தும் ஆஸ்திரேலியாவை விடாமல் போராடி இந்தியா தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது

Advertisement