- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா 2027 உ.கோ வெல்ல விராட், ரோஹித தேவை.. நான் அந்த எல்லாக் கோப்பையும் ஜெய்க்கனும்.. கில் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியா மண்ணில் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா கழற்றி விடப்பட்டு சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இத்தனைக்கும் 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை ரோஹித் சர்மா தலைமையில் வென்று இந்தியா சாதனை படைத்தது.

அதனால் 2027 உலகக் கோப்பையில் ரோஹித் தலைமையில் இந்தியா களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அப்போது 40 வயதில் அவரால் அசத்த முடியுமா என்று சந்தேகிக்கும் தேர்வுக்குழு இப்போதே கில் தலைமையில் புதிய அணியை உருவாக்க துவங்கியுள்ளது. அதனால் 2027 உலகக் கோப்பையில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

- Advertisement -

ஐசிசி கோப்பைகள்:

இந்நிலையில் கேப்டனாக டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி போன்ற அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வெல்ல விரும்புவதாக கில் தெரிவித்துள்ளார். மேலும் 2027 உலகக் கோப்பையை வெல்வதற்கு விராட், ரோஹித் போன்ற அனுபவ வீரர்கள் தேவை என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி கில் பேசியது பின்வருமாறு. “இது மிகப்பெரிய பொறுப்பு மற்றும் கௌரவம். ஒருநாள் கிரிக்கெட்டில் தேசத்தை தலைமை தாங்க உற்சாகத்துடன் உள்ளேன்”

“அனைத்து ஃபார்மெட்டிலும் இந்தியாவுக்காக விளையாடுவது மிகப்பெரிய சவாலாகும். இருப்பினும் அனைத்து ஃபார்மெட்டிலும் நான் வெற்றிகரமாக விளையாடி ஐசிசி கோப்பைகளை வெல்ல விரும்புகிறேன். அதைச் செய்ய விரும்பினால் இந்த சவாலை நான் கடந்து செல்ல வேண்டும். இந்தியாவுக்காக நிறைய போட்டிகளை வென்று கொடுத்துள்ள விராட், ரோஹித் ஆகியோரிடம் ஏராளமான அனுபவம் இருக்கிறது”

- Advertisement -

விராட், ரோஹித் தேவை:

“சில வீரர்கள் மட்டுமே இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். திறமை மற்றும் தரத்துடன் அனுபவத்தைக் கொண்ட வீரர்கள் சிலர் மட்டுமே உள்ளனர். உலகளவில் சிலரிடம் மட்டுமே திறமை, தரத்துடன் அனுபவம் இருக்கிறது. அந்த அடிப்படையில் அவர்கள் இந்திய அணிக்கு தேவைப்படுகின்றனர். இந்திய அணியை தலைமைத் தாங்குவது கௌரவமான செயல்”

இதையும் படிங்க: அம்பயரால் தவறிய ஜெய்ஸ்வால் இரட்டை சதம்? வெ.இ கீப்பர் செய்த தவறு.. நடந்தது என்ன?

“மிகவும் அமைதியான ரோஹித் பாய் இந்திய அணியில் நல்ல நட்பை ஏற்படுத்தியுள்ளார். நானும் அந்த சூழ்நிலையை தொடர விரும்புகிறேன்” என்று கூறினார். இதிலிருந்து விராட், ரோகித் இந்திய அணிக்கு தேவை என்று அஜித் அகர்கர், கௌதம் கம்பீருக்கு கேப்டன் கில் சமிக்கை கொடுக்கிறார் என்றே சொல்லலாம். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டை போல விராட், ரோஹித் ஒருநாள் போட்டிகளிலும் கழற்றி விடப்படுவதற்கே பிரகாச வாய்ப்புள்ளது.

- Advertisement -