இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வருகிறது. அக்டோபர் 101ம் தேதி துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் 38 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
அவருடன் இணைந்து விளையாடிய ஜெய்ஸ்வால் அரை சதத்தை அடித்து அசத்தினார். எதிர்ப்புறம் வந்த சாய் சுதர்சன் 2வது விக்கெட்டுக்கு 193 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதமடித்து 87 ரன்கள் குவித்து அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஜெய்ஸ்வால் தம்முடைய 7வது சதத்தை கடந்து 150 ரன்கள் தாண்டி அசத்தலாக விளையாடினார்.
ஜெய்ஸ்வால் ரன் அவுட்:
அவருடைய நல்ல ஆட்டத்தால் முதல் நாள் முடிவில் இந்தியா 318/2 ரன்கள் எடுத்தது. களத்தில் கேப்டன் கில் 20*, ஜெய்ஸ்வால் 173* ரன்களுடன் இருந்தார். அந்த நிலையில் இன்று துவங்கிய 2வது நாள் ஆட்டத்தில் சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 175 ரன்களில் ரன் அவுட்டானார். குறிப்பாக ஜெய்டன் சீல்ஸ் வீசிய 92வது ஓவரின் 2வது பந்தை எதிர்கொண்ட அவர் சிங்கள் எடுக்க ஓடினார்.
மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பந்தை எடுப்பதை பார்த்த சுப்மன் கில் சிங்கிள் எடுக்க மறுப்பு தெரிவித்தார். அதனால் ஜெயஸ்வால் மீண்டும் வெள்ளைக்கோட்டை நெருங்குவதற்குள் வெஸ்ட் இண்டீஸ் கீப்பர் பந்தை பிடித்து ரன் அவுட்டாக்கினார். அதைப் பார்த்த நடுவர் ஜெய்ஸ்வாலுக்கும் வெள்ளைக்கோட்டுக்கும் இடையே சில அடிகள் இடைவேளை இருந்ததால் சற்றும் யோசிக்காமல் ரன் அவுட் வழங்கினார்.
சந்தேகத்துக்குரிய ரன் அவுட்:
அதனால் ஜெயஸ்வால் ஏமாற்றத்துடன் நடையைக் கட்டிய பின் பெரிய திரையில் ரிப்ளை காண்பிக்கப்பட்டது. அதில் வெஸ்ட் இண்டீஸ் கீப்பர் பந்தைப் பிடித்து ஸ்டம்ப் மேலே அடிக்கும் போது பந்து அவருடைய கைகளை விட்டு நழுவிச் சென்றது தெரிந்தது. அதே சமயம் பெய்ல்ஸ் நீக்கப்படும் போது பந்து அவருடைய கைகளில் லேசாக உரசி கொண்டிருப்பது போலவும் தெரிகிறது.
இதையும் படிங்க: கொஞ்சம் இருங்க பாய்.. கான்வே, கரண் உட்பட 6 பேர் கழற்றி விடப் படுகிறார்களா? சிஎஸ்கே வெளியிட்ட அறிவிப்பு
எனவே அந்த இடத்தில் அவுட் – அவுட்டில்லை என்று சொல்வதற்கு 50 – 50% வாய்ப்புகள் காணப்படுகின்றது. அதனால் ஒருவேளை நடுவர் அதைச் சரியாக கவனித்து 3வது நடுவரின் உதவியை நாடியிருந்தால் ஜெய்ஸ்வாலுக்கு சாதகமான தீர்ப்புகள் வருவதற்கு வாய்ப்பு இருந்திருக்கலாம். ஒருவேளை சாதகமான தீர்ப்பு வந்திருந்தால் ஜெய்ஸ்வால் இரட்டை சதத்தை அடித்திருக்கலாம். அதற்காக இங்கே ஜெய்ஸ்வால் இரட்டை சதத்தை தவற விட்டதற்கு நடுவர் காரணம் என்று சொல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.



