- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இங்கிலாந்து வீரர்களை மைதானத்திலேயே வைத்து கிண்டல் செய்த இந்திய கேப்டன் சுப்மன் கில் – என்ன நடந்தது?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது நேற்று ஜூலை 10-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி நிதானமான ரன் குவிப்பை வழங்கி வருகிறது.

இங்கிலாந்து வீரர்களை கலாய்த்த இந்திய வீரர்கள் :

நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணியானது 4 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களை குவித்துள்ளது. இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அதனைத்தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டி நடைபெற்ற போது இங்கிலாந்து அணியின் வீரர்களை இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆகியோர் மைதானத்திலேயே வைத்து கிண்டல் செய்த சம்பவம் தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் எப்பொழுதுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் பேஸ்பால் என்ற பெயரில் அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து அணியானது இரண்டாவது போட்டியில் தோல்வியை சந்தித்ததால் நேற்றைய போட்டியின் போது பொறுமையாக ரன் குவித்தது. இதனை கவனித்த இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் : இங்கிலாந்து வீரர்களை கிண்டல் அடிக்கும் வகையில் மைதானத்தில் கேலியாக பேசியிருந்தார்.

- Advertisement -

அந்த வகையில் போட்டியின் ஒரு குறிப்பிட்ட ஓவரின் போது பும்ரா பந்து வீசுகையில் ஸ்லிப் பகுதியில் இருந்து கேப்டன் கில் இங்கிலாந்து வீரர்களை நோக்கி “இனி பொழுதுபோக்கு கிரிக்கெட் எல்லாம் கிடையாது”, “டெஸ்ட் கிரிக்கெட் மீண்டும் போர் அடிக்கும் வகையில் வந்துவிட்டது” வாங்க பாய்ஸ் என இங்கிலாந்து அணியினரை கிண்டல் அடித்து இந்திய வீரர்களிடம் பேசினார். இது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி உள்ளது.

இதையும் படிங்க : ஃப்ரீயாவே தரேன் எடுத்துக்கோங்க.. ஆசைக் காட்டி விளையாடிய ஜடேஜா.. சிரித்த ஜோ ரூட்.. 6வது வீரராக காத்திருப்பு

அதேபோல் இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் : இங்கிலாந்து அணியின் அனுபவ வீரரான ஜோ ரூட் பேட்டிங் செய்யும்போது அவருக்கு எதிராக ஒரு சிறப்பான பந்தினை வீசிவிட்டு நான் “பேஸ்பால்” கிரிக்கெட்டை நீங்கள் விளையாட பார்க்க விரும்புகிறேன். இப்போது அதிரடியாக ஆடுங்கள் பார்க்கலாம் என்பது போன்று கிண்டல் செய்திருந்தார். அவரது அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -