- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சென்னை பிட்ச்ல இதை பண்றது சாதாரண விடயம் கிடையாது.. பவுலர்களை பாராட்டிய – சுப்மன் கில்

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 44.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்களை குவித்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக ஹஸ்மத்துல்லா ஷாகிதி 102 ரன்களையும், அஸ்மத்துல்லா ஓமர்சாய் 50 ரன்களையும் குவித்தனர்.

மூன்றாவது போட்டியில் அடைந்த வெற்றிக்கு பின்னர் பேசிய : சுப்மன் கில்

பின்னர் 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 28.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 224 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 110 ரன்களையும், ரோகித் சர்மா 79 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது :

- Advertisement -

உண்மையிலேயே இந்த போட்டியின் போது எங்களது அணியின் பந்துவீச்சு மிகச்சிறப்பாக இருந்தது. அதிலும் குறிப்பாக சேப்பாக்கம் போன்ற மைதானத்தில் குர்னூர் பிரார் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் துவக்க ஓவர்களை வீசிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. போட்டியின் ஆரம்பத்திலேயே எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் ஆப்கானிஸ்தான் அணியை அழுத்தத்தில் வைத்ததால் விக்கெட்டுகளும் தொடர்ச்சியாக கிடைத்தன.

அதேபோன்று இந்த போட்டியின் மிடில் ஓவர்களில் பேட்டிங்காக இருந்தாலும் சரி, பந்துவீச்சாக இருந்தாலும் சரி கூடுதல் உத்வேகத்தை காண்பிக்க வேண்டும் என்று நினைத்தோம். அந்த வகையிலே நாங்கள் நினைத்தபடி அனைத்தும் சரியாக நடைபெற்றது. இந்த போட்டியில் நாங்கள் எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டதாக உணர்கிறோம். வீரர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக தங்களது பங்களிப்பை வழங்கியிருந்தனர். இந்த போட்டியில் எங்களது பந்து வீச்சாளர்களை வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரையும் தவறவிடும் ஹார்டிக் பாண்டியா – காரணம் என்ன?

எதிர்வரும் இங்கிலாந்து தொடரில் விளையாட ஆவலாக காத்திருக்கிறோம். ஏனெனில் ஏற்கனவே நாங்கள் தென்னாப்பிரிக்கா மைதானங்களில் விளையாடியுள்ளோம். அங்கிருக்கும் மைதானங்களும் இங்கிலாந்து மைதானங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும் என்பதனால் எதிர்வரும் இங்கிலாந்து தொடரின் சவாலை எதிர்கொள்ள காத்திருக்கிறோம் என சுப்மண் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -