இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரையும் தவறவிடும் ஹார்டிக் பாண்டியா – காரணம் என்ன?

Hardik Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றி விட்டது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டியானது இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து ஒருநாள் தொடரை தவறவிடும் ஹார்டிக் பாண்டியா :

இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடர் முடிந்த கையோடு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அங்கு நடைபெற உள்ள டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அந்த வகையில் இம்மாத இறுதியில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி முதலில் அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடுகிறது.

- Advertisement -

அதன்பிறகு ஜூலை 14-ம் தேதி முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்னும் 3-4 நாட்களில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இவ்வேளையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை காயம் காரணமாக தவறவிட்ட ஹார்டிக் பாண்டியா இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் தவற விடுகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வகையில் பி.சி.சி.ஐ சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் : ஹார்டிக் பாண்டியா இன்னும் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் அளவிற்கு முழு உடற்தகுதியை எட்டவில்லை என்றும் அவர் போதுமான அளவு பந்துவீசும் திறனை மீட்டெடுத்தால் மட்டுமே அவர் ஒருநாள் போட்டிகளில் மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை அவர் தவற விடுகிறார் என்று குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : கடந்த 18 மாசமா நாங்க அவரை பாத்துக்கிட்டே இருக்கோம்.. நிதீஷ் ரெட்டியின் பிளஸ் குறித்து பேசிய – துணை கோச் பேட்டி

மற்றொரு நட்சத்திர வீரரான விராட் கோலியை பொருத்தவரை அவர் ஜூன் 22-ஆம் தேதி தனது உடற்தகுதியை நிரூபிப்பார் என்றும் அப்படி அவர் நிரூபிக்கும் பட்சத்தில் இங்கிலாந்து தொடரில் பங்கேற்று விளையாடுவார் என்றும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஹார்டிக் பாண்டியா இங்கிலாந்து தொடரையும் தவறவிடுகிறார் என்பது உறுதி.

Advertisement