- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நான் டபுள் செஞ்சுரி பத்தி யோசிச்சதே அந்த ஒரு ஓவருக்கு அப்புறம் தான் – ஆட்டநாயகன் சுப்மன் கில் பேட்டி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெடுகளை இழந்து 349 ரன்களை குவித்தது. இந்திய அணியின் இந்த அதிரடியான ரன் குவிப்புக்கு மிக முக்கிய காரணமாக துவக்க வீரர் சுப்மன் கில் திகழ்ந்தார்.

- Advertisement -

துவக்க வீரராக களம் இறங்கிய அவர் 149 பந்துகளை சந்தித்து 19 பவுண்டரி மற்றும் 9 சிக்சர்கள் என 208 ரன்கள் அடித்து கடைசி ஓவரின் போது ஆட்டம் இழந்து வெளியேறினார். அவரது இந்த சிறப்பான இரட்டை சதம் காரணமாக இந்திய அணி 349 ரன்கள் குவித்தது. பின்னர் 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது இறுதிவரை போராடி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்களை குவித்தது.

இதன் காரணமாக இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை ருசித்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இரட்டை சதம் அடித்த துவக்க வீரர் சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இந்நிலையில் போட்டி முடிந்து அவரது இந்த சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

இன்றைய போட்டியில் விளையாடுவதற்காக நான் ஆவலாக காத்திருந்தேன். முடிவில் இரட்டை சதம் அடித்ததில் மிகவும் மகிழ்ச்சி. நான் எப்பொழுதுமே டாட் பால்களை விரும்ப மாட்டேன். எப்பொழுதுமே கேப்பை பார்த்து பவுண்டரி அடிக்கவே ஆசைப்படுவேன். மேலும் ஒரு இன்டன்டுடன் விளையாடியதால் என்னால் பெரிய ஸ்கோர் அடிக்க முடிந்தது. அதோடு 47வது ஓவர் வரை நான் இரட்டை சதம் அடிப்பது குறித்து எல்லாம் யோசிக்கவில்லை.

இதையும் படிங்க : பும்ராவை மிஞ்சும் சிராஜ், சொந்த ஊரில் தாய்க்கும் தாய் நாட்டுக்கும் பெருமை – அவருடைய அம்மாவின் மகிழ்ச்சி பேட்டி இதோ

47வது ஓவரின் போது சில சிக்ஸர்களை நான் அடித்ததுமே தான் எனக்கு இரட்டை சதம் அடிக்க வேண்டும் என்ற நம்பிக்கை வந்து அதனை பூர்த்தி செய்தேன். ஏற்கனவே இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்தபோது நான் அவருடன் இருந்தேன். தற்போது நான் இரட்டை சதம் அடித்த போட்டியில் அவர் இருந்ததில் மகிழ்ச்சி என்று சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by