பும்ராவை மிஞ்சும் சிராஜ், சொந்த ஊரில் தாய்க்கும் தாய் நாட்டுக்கும் பெருமை – அவருடைய அம்மாவின் மகிழ்ச்சி பேட்டி இதோ

- Advertisement -

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இந்தியா அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ளது. அதில் ஜனவரி 18ஆம் தேதியன்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் போராடி த்ரில் வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 349/8 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கி கடைசி ஓவர் வரை நியூசிலாந்து பவுலர்களைப் பந்தாடிய சுப்மன் கில் 19 பவுண்டரி 9 சிக்சருடன் 208 (149) ரன்கள் குவித்து ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரராக உலக சாதனை படைத்தார். அதைத்தொடர்ந்து 350 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு ஃபின் ஆலன் 40, டேவோன் கான்வே 10, ஹென்றி நிக்கோலஸ் 18, டார்ல் மிட்சேல் 9, கேப்டன் டாம் லாதம் 24, கிளன் பிலிப்ஸ் 11 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

தாயும் தாய் நாடும்:
அதனால் 131/6 என சரிந்து தோல்வியின் பிடியில் சிக்கிய அந்த அணிக்கு 7வது விக்கெட்டுக்கு 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெறித்தனமாக போராடிய மைக்கேல் பிரேஸ்வெல் – மிட்சேல் சாட்னர் ஜோடி இந்தியாவின் வெற்றியை கேள்விக்குறியாக்கியது. அந்த பரபரப்பான தருணத்தில் 46வது ஓவரை வீசிய முகமது சிராஜ் 57 (45) ரன்கள் எடுத்திருந்த மிச்சேல் சாட்னரை அவுட்டாக்கியதுடன் அடுத்து வந்த சிப்லேவே கோல்டன் டக் அவுட்டாக்கி மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

இருப்பினும் மறுபுறம் வெளுத்து வாங்கிய மைக்கேல் பிரேஸ்வெல் 12 பவுண்டரி 10 சிக்ஸருடன் 140 (78) ரன்கள் குவித்து போராடி சர்துள் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அதனால் வென்ற இந்தியாவின் வெற்றிக்கு இரட்டை சதமடித்த சுப்மன் கில் ஆட்டநாயகன் விருது வென்றாலும் பந்து வீச்சில் இதர பவுலர்களை காட்டிலும் 10 ஓவரில் 2 மெய்டன் உட்பட 46 ரன்களை மட்டும் கொடுத்து 4.60 என்ற சிறப்பான எக்கனாமியில் அபாரமாக செயல்பட்ட முகமது சிராஜ் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார் என்றே கூறலாம்.

- Advertisement -

குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் அதிரடி வீரர் டேவோன் கான்வேயை 10 ரன்னில் அவுட்டாக்கிய அவர் அவர் மிடில் ஓவர்களில் நங்கூரத்தை போட முயன்ற கேப்டன் டாம் லாதமை 24 ரன்களில் காலி செய்தார். மொத்தத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை போட்டியின் அனைத்து நேரங்களிலும் அபாரமாக செயல்பட்டு விக்கெட்டுகளை எடுத்த அவர் சமீபத்திய இலங்கையை தொடரிலும் 9 விக்கெட்டுகளை எடுத்து அறிவிக்கப்படாத தொடர் நாயகனாக செயல்பட்டார். ஆரம்ப காலங்களில் ரன்களை வாரி வழங்கி ரசிகர்களின் கிண்டல்களுக்கு உள்ளான அவர் சமீப காலங்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி முதன்மை பவுலராக உருவெடுத்து வருகிறார்.

குறிப்பாக காயமடைந்த பும்ராவுக்கு பதிலாக பெற்ற வாய்ப்பில் அபாரமாக செயல்படும் அவர் ஒருநாள் போட்டிகளில் தற்சமயத்தில் சிறந்த பவுலிங் சராசரியை கொண்ட இந்திய வேகப்பந்து வீச்சாளராக (21.02) பும்ராவை மிஞ்சி சாதனைப்படுத்துள்ளார். இதைப் பார்க்கும் ரசிகர்கள் பும்ரா ஐபிஎல் தொடரில் விளையாடட்டும் இவரை 2023 உலக கோப்பையில் தேர்வு செய்யுங்கள் என்று ஆதரவு கொடுக்கிறார்கள்.

- Advertisement -

முன்னதாக இப்போட்டி தன்னுடைய சொந்த ஊரான ஹைதராபாத்தில் நடைபெற்றதால் அதற்கு தனது குடும்பத்தை சிராஜ் அழைத்து வந்திருந்தார். அந்த தருணத்தில் தாயையும் தாய் நாட்டுக்கும் பெருமை சேர்த்த அவரை ஆட்டோ ஓட்டி வளர்த்த அவருடைய தந்தை வானத்திலிருந்து பெருமை அடைந்திருப்பார் என்று சொல்லலாம். குறிப்பாக 2021இல் தனது தந்தை இறந்த போது தேசப்பற்றுடன் ஆஸ்திரேலியாவில் சிராஜ் விளையாடியதை யாரும் மறக்க முடியாது.

இதையும் படிங்க: வீடியோ : டெய்லி கெட்ட வார்த்தையில் திட்டுவேன், கேப்டனே நீங்க தான் பய்யா – சிரிக்க வைக்கும் கில், இஷான், ரோகித் பேட்டி

அப்படி தாய் நாட்டை பெருமை வைக்கப்பட வைத்த தனது மகன் பற்றி அவரது தாய் பேசியது பின்வருமாறு. “சிராஜ் எங்களை இப்போட்டியை மைதானத்திற்கு நேரில் வந்து பார்ப்பதற்கு விரும்பி அதற்கான வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்தார். அவருடைய தந்தை இப்போது இருந்தால் நிச்சயமாக பெருமை அடைந்திருப்பார். எனது மகன் தொடர்ந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்” என்று கூறினார்.

Advertisement