- Advertisement -

எல்லாம் ஓகே.. 269 ரன்ஸ் அடிச்சும் இதை ஏன் மிஸ் பண்ண.. தந்தையிடம் இருந்து வந்த கால் குறித்து – சுப்மன் கில் பேச்சு

இங்கிலாந்து அணிக்கு எதிராக எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. கடந்த ஜூலை 2-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 587 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

தந்தையிடம் இருந்து வந்த வாழ்த்து குறித்து பேசிய சுப்மன் கில் :

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சுப்மன் கில் 387 பந்துகளை சந்தித்து 30 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 269 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் அடித்த இந்த இரட்டை சதம் மூலம் ஏகப்பட்ட சாதனையை இந்த போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ஆசிய கண்டத்தை சேர்ந்த முதல் கேப்டனாக இங்கிலாந்து மண்ணில் அவர் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் 250 ரன்களுக்கு மேல் குவித்த சுப்மன் கில் 300 ரன்கள் வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவ்வேளையில் வாஷிங்டன் சுந்தர் ஆட்டம் இழந்ததும் அதிரடியாக விளையாட முற்பட்டு 269 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரது இந்த சிறப்பான இன்னிங்ஸ்ற்கு பலரது மத்தியிலும் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து தனக்கு வந்த வாழ்த்து குறித்து பேசியிருந்த சுப்மன் கில் கூறுகையில் : நேற்றைய போட்டி முடிந்ததும் என்னுடைய அம்மா என்னை அழைத்து “உன்னுடைய பேட்டிங்கை பார்ப்பதில் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது”, “கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்” என்று கூறினார்.

- Advertisement -

அதேபோன்று எனது தந்தை பேசுகையில் : “இன்று நீ மிகச்சிறப்பாக விளையாடினாய்”, அண்டர் 16 அண்டர் 19 அணியில் நீ சிறப்பாக விளையாடியதை போல இன்று அற்புதமான ஆட்டத்தை விளையாடியதாக உணர்ந்தேன். ஆனாலும் நீ 300 ரன்கள் அடித்திருக்க வேண்டும் என என் தந்தை கூறினார் என்று சுப்மன் கில் தனக்கு வந்த வாழ்த்து குறித்து பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பி.சி.சி.ஐ-யின் விதிமுறையை மீறி நடந்துகொண்ட ரவீந்திர ஜடேஜா.. என்ன நடந்தது? – நடவடிக்கை பாயுமா?

இந்த போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் குவிந்திருந்த இங்கிலாந்து அணி இன்று 510 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் மூன்றாம் நாள் ஆட்டத்தில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -