பி.சி.சி.ஐ-யின் விதிமுறையை மீறி நடந்துகொண்ட ரவீந்திர ஜடேஜா.. என்ன நடந்தது? – நடவடிக்கை பாயுமா?

Jadeja
- Advertisement -

கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணியானது படு மோசமாக இழந்த வேளையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ பல்வேறு கடுமையான விதிமுறைகளை கொண்டு வந்தது. அந்த வகையில் வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் பயணிக்கக்கூடாது என்றும் குறிப்பிட்ட நாட்களுக்கு நிர்வாகத்தின் அனுமதியுடன் தான் வீரர்கள் தங்களது குடும்பத்தினரை வெளிநாட்டிற்கு தொடருக்கு அழைத்துச் செல்லலாம் என்றெல்லாம் பல விதிகள் போடப்பட்டன.

பி.சி.சி.ஐ-யின் விதிமுறையை மீறிய ரவீந்திர ஜடேஜா :

அதுமட்டுமின்றி வீரர்களின் கவன சிதறலை குறைப்பதற்காக எந்த ஒரு இந்திய வீரரும் தனியாக பயணிக்கக்கூடாது என்றும் போட்டியின் போதும் சரி, பயிற்சியின் போதும் சரி நிர்வாகம் ஏற்பாடு செய்யும் பேருந்தில் குழுவாக பயணிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதெல்லாம் அணியின் நலனுக்காவவே எடுக்கப்பட்ட முடிவாகவும் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளுக்கு முன்னதாக ரவீந்திர ஜடேஜா பிசிசிஐ-யின் இந்த விதிமுறையை மீறியதாக கூறப்படுகிறது. அதாவது போட்டியின் இரண்டாம் நாளான நேற்று ஜடேஜா வீரர்களுடன் பயணிக்காமல் தனியாக எட்ஜ்பேஸ்டன் மைதானத்திற்கு சென்றுள்ளார்.

தனியாக யாரும் பயணிக்கூடாது என்று கூறப்பட்டும் ஜடேஜா இப்படி செய்தது கண்டிப்பாக விதிமுறை மீறல்தான் ஆனாலும் அவரது நோக்கம் அணியின் நலனுக்காகவே இருந்தது. அதாவது போட்டி துவங்கும் இரண்டாவது நாளுக்கு முன்கூட்டியே சென்ற ஜடேஜா அங்கு பேட்டிங் பயிற்சி மேற்கொள்ளவே சென்று இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

போட்டி துவங்கும் முன் சில பந்துகளை எதிர்கொண்டு பயிற்சி செய்தால் போட்டியின் போது நல்ல டச் இருக்கும் என்பதனாலே ஜடேஜா இதை செய்தார் என்று கூறப்படுகிறது. அதனால் அவர் மீது பெரிய நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இதை நாங்க முதல் போட்டியிலேயே பண்ணியிருந்தா முடிவு வித்தியாசமா இருந்திருக்கும் – சுப்மன் கில் பேட்டி

ஆனாலும் பிசிசிஐ-யின் விதிமுறைகள் அனைத்து வீரர்களுக்கும் சமம் என்றும் இனி யாரும் இது போன்ற தவறுகளை செய்யக்கூடாது என்றும் நிர்வாகம் ஏற்பாடு செய்யும் பேருந்துகளில் குழுவுடன் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் தனியாக யாரும் பயணம் செய்யக் கூடாது என்றும் கண்டிப்புடன் கூடிய எச்சரிக்கையை ரவீந்திர ஜடேஜாவிற்கு பிசிசிஐ வழங்கும் என்று தெரிகிறது.

Advertisement