இதை நாங்க முதல் போட்டியிலேயே பண்ணியிருந்தா முடிவு வித்தியாசமா இருந்திருக்கும் – சுப்மன் கில் பேட்டி

Shubman Gill
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று முன்தினம் ஜூலை 2-ஆம் தேதி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி 587 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதல் போட்டிக்கு பின்னரே அதன் அருமை தெரிந்தது : சுப்மன் கில்

இந்திய அணி சார்பாக முதல் இன்னிங்சில் அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 269 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 89 ரன்களையும், யாஷஸ்வி ஜெய்ப்பால் 87 ரன்களையும் குவித்தனர். பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இங்கிலாந்து அணியானது நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் குவித்துள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக 510 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து இந்திய அணியின் இந்த சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது :

இந்த போட்டியில் நாங்கள் தற்போது நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறோம். ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு நான் ஒரு சில விடயங்களில் பயிற்சி செய்தேன். அது தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் எனக்கு உதவுகிறது. கடந்த இரண்டு நாட்களாகவே நான் பேட்டிங் செய்து வந்ததால் ஸ்லிப் கேட்சிங் பயிற்சியை செய்யவில்லை.

- Advertisement -

ஆனாலும் தற்போது அந்த இடத்தில் நின்று ஒரு கேட்ச் பிடித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை பீல்டிங் எவ்வளவு முக்கியம் என்பதை முதல் போட்டி முடிந்த பின்னரே உணர்ந்து கொண்டோம். அதன் பிறகு நாங்கள் அதற்காக தனியாக ஒரு மீட்டிங்கையும் வைத்திருந்தோம்.

இதையும் படிங்க : ஐபிஎல்’லயே துவங்கினேன்.. 40இல் தடுமாறியப்போ கம்பீர் உதவினாரு.. இதை பாதி சரியா செஞ்சாவே ஜெய்க்கலாம்.. கில் பேட்டி

இந்த இரண்டாவது போட்டியில் எங்களது பீல்டிங் தற்போது வரை சிறப்பாக உள்ளது. இதை நாங்கள் முதல் போட்டியிலேயே செய்திருந்தால் நிச்சயம் முடிவு வித்தியாசமாக இருந்திருக்கும் என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement