ஐபிஎல்’லயே துவங்கினேன்.. 40இல் தடுமாறியப்போ கம்பீர் உதவினாரு.. இதை பாதி சரியா செஞ்சாவே ஜெய்க்கலாம்.. கில் பேட்டி

Shubman Gill 2
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. ஜூலை இரண்டாம் தேதி துவங்கிய இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அபாரமாக விளையாடி 587 ரன்கள் குவித்து அசத்தியது.

இந்திய அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 87 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தார். 4வதாக களமிறங்கிய கேப்டன் சுப்மன் கில் 2 நாட்கள் பேட்டிங் செய்து இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக விளையாடி இரட்டை சதத்தை அடித்து 259 ரன்கள் குவித்தார். அவருடன் ரவீந்திர ஜடேஜா 89, வாஷிங்டன் சுந்தர் 42 ரன்கள் அடித்து இந்தியாவை வலுப்படுத்தினர்.

- Advertisement -

ஐபிஎல் முதலே பயிற்சி:

இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சோயப் பஷீர் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்ததாக விளையாடும் இங்கிலாந்து இரண்டாவது நாள் முடிவில் 77/3 ரன்களை எடுத்தது. இந்நிலையில் இப்போட்டியில் 30 – 40 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது தம்மால் சுலபமாக ரன்கள் குவிக்க முடியவில்லை என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார். அப்போது பயிற்சியாளர் கௌதம் கம்பீரிடம் தேனீர் இடைவேளையில் பேசியது உதவியதாகவும் அவர் கூறியுள்ளார்.

2025 ஐபிஎல் தொடரிலேயே இங்கிலாந்து தொடரில் அசத்துவதற்கான பயிற்சிகளையும் திட்டங்களையும் துவங்கியதாக கில் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முதல் நாளில் நான் பேட்டிங் செய்ய சென்ற போது தேனீர் இடைவேளை சமயத்தில் 35 – 40 ரன்கள் அடித்திருந்தேன்”

- Advertisement -

கம்பீர் ஆலோசனை:

“அப்போது பவுண்டரிகள் அடிப்பது கடினமாக இருப்பதைப் பற்றியும் நிறைய வாய்ப்புகளை தவற விடுவதைப் பற்றியும் கௌதம் கம்பீர் பாயிடம் பேசினேன். அந்த சமயத்தில் பந்து மிருதுவாக மாறியிருந்ததால் முதல் போட்டியைப் போல என்னால் சுதந்திரமாக ரன்கள் அடிக்க முடியவில்லை. ஆனால் எந்த நேரத்திலும் பேட்டிங்கில் சரிவு ஏற்படும் என்பதை முதல் போட்டியில் கற்றுக் கொண்டேன். எனவே குறைந்த தவறுகளை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய மனநிலையாக இருந்தது”

இதையும் படிங்க: பும்ராவுக்கு பதிலாக விளையாட கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ஆகாஷ் தீப் – 2 ஆவது ஓவரில் மேஜிக்

“ஐபிஎல் மற்றும் இத்தொடர் துவங்குவதற்கு முன்பாக நான் நிறைய வேலை செய்தேன். விஷயங்கள் சென்றதை வைத்து பார்க்கும் போது அது எனக்கு வேலை செய்துள்ளது. கடந்த சில நாட்களாக பேட்டிங் செய்ததால் நான் ஸ்லிப் கேட்ச்களை பிடிக்கவில்லை. அந்த கேட்ச்களை பிடித்தது நன்றாக இருக்கிறது. ஃபீல்டிங் மிகவும் முக்கியம் என்று நாங்கள் விவாதித்தோம். கடந்த போட்டியில் வெளிப்படுத்திய ஃபீல்டிங்கில் பாதி சிறப்பாக செய்தால் கூட வெற்றியில் வித்தியாசம் ஏற்படும்” என்று கூறினார்.

Advertisement