IND vs WI : அவங்க என்கிட்ட கேட்டாங்க. அதான் ஒத்துக்கிட்டேன். 3ஆவது இடத்தில் களமிறங்குவது குறித்து – சுப்மன் கில் விளக்கம்

Shubman-Gill
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது நேற்று ஜூலை 12-ஆம் தேதி டோமினிக்கா நகரில் துவங்கியது. கடந்த மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்த பிறகு அடுத்த கட்ட மாற்றத்திற்கு தயாராகியுள்ளது. அந்த வகையில் தற்போது பல்வேறு இளம் வீரர்களை இந்திய அணியில் இணைத்துள்ள அணியின் நிர்வாகம் புஜாராவை அதிரடியாக அணியிலிருந்து நீக்கி அவருக்கு பதிலாக விளையாடப்போவது யார்? என்ற ஆவலையும் எழுப்பியது.

IND vs WI

- Advertisement -

அந்த வகையில் புஜாராவின் இடத்தில் விளையாடப்போவது சுப்மன் கில் தான் என்று ரோகித் சர்மா போட்டிக்கு முன்னதாகவே உறுதி செய்தார். ஏனெனில் துவக்க வீரராக தன்னுடன் இடது கை ஆட்டக்காரரான ஜெயிஸ்வால் அறிமுகமானால் அணியில் இடது கை, வலது கை காம்பினேஷன் கிடைக்கும் என்பதனால் அறிமுக வீரராக ஜெயஸ்வால் விளையாடுவார் என்று தெரிவித்திருந்தார்.

அதோடு துவக்க வீரராக விளையாடி வந்த சுப்மன் கில் புஜாராவின் 3-ஆவது இடத்தில் விளையாட இருப்பதாகவும் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். அதுமட்டும் இன்றி சுப்மன் கில் மூன்றாவது இடத்தில் விளையாட விரும்புவதாக டிராவிடிடம் அவரே கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.

Gill

இந்நிலையில் தற்போது 23 வயதான சுப்மன் கில் தான் ஏன் மூன்றாவது இடத்தில் விளையாட சம்மதித்தேன் என்பது குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்தியா ஏ அணியில் நான் விளையாடிய போதும் சரி, என்னுடைய ஆரம்ப கட்டத்திலும் சரி நான் நிறைய போட்டிகளில் மூன்றாவது இடத்திலும், நான்காவது இடத்திலும் தான் தொடர்ச்சியாக விளையாடி வந்தேன்.

- Advertisement -

எனவே எனக்கு அந்த இடங்களில் விளையாடுவது பிடிக்கும். அதுமட்டும் இன்றி இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக அணியின் நிர்வாகமும் என்னை எந்த இடத்தில் பேட்டிங் செய்ய விரும்புகிறீர்கள்? என்று கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டதற்காகவே நான் மூன்றாவது இடத்தில் களமிறங்கி விளையாட ஆசைப்படுகிறேன் என்றும் அந்த இடம் எனக்கு சரியான இடமாக இருக்கும் என்று கூறினேன்.

இதையும் படிங்க : வீடியோ : அடிப்பட்டாலும் பரவால்ல, அபாரமான கேட்ச்சை பிடித்து காயமடைந்த சிராஜ் – ஜாம்பவான் வால்ஷ் பாராட்டு

அதுமட்டும் இன்றி புதுப்பந்தை எதிர்த்து விளையாடுவது சிறப்பான ஒன்று. நான் துவக்க வீரராக இறங்கினாலும் சரி, மூன்றாவது வீரராக இருந்தாலும் சரி பெரிய அளவில் மாற்றம் இருக்காது. இருந்தாலும் எனக்கு சௌகரியமான இந்த மூன்றாவது இடத்தில் விளையாடுவது நன்றாக இருக்கும் என்பதனாலே அந்த முடிவை எடுத்ததாக சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement