IND vs NZ : உலகையே மிரட்டும் மிட்சேல் ஸ்டார்க்கை அசால்ட்டாக டீல் செய்யும் சுப்மன் கில், யூனிஸ் கானை மிஞ்சி புதிய சாதனை

Shubman Gill Vs Starc
Advertisement

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதி வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அத்தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றிய இந்தியாவை 3வது போட்டியில் தோற்கடித்த ஆஸ்திரேலியா தங்களது நம்பர் ஒன் இடத்தை காப்பாற்றி 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. அதனால் ஃபைனலுக்கு தகுதி பெற மார்ச் 9ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் துவங்கிய கடைசி போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து பிளாட்டான பிட்ச்சில் 480 ரன்கள் குவித்து அசத்தியது.

அதிகபட்சமாக தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 422 பந்துகளை எதிர்கொண்டு மரத்தான் இன்னிங்ஸ் விளையாடி 180 ரன்களும் கேமரூன் கிரீன் சதமடித்து 114 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஷ்வின் 6 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 74 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா 35 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில் சதமடித்து அசத்தினர். அவருடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த புஜாரா 42 ரன்களில் அவுட்டானர்.

- Advertisement -

ஸ்டார்க்கை டீல் செய்யும் கில்:
அடுத்து வந்த விராட் கோலியுடன் 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சுப்மன் கில் 12 பவுண்டரி 1 சிக்சருடன் 128 ரன்கள் குவித்து நேதன் லயனிடம் அவுட்டானார். அவருக்குப்பின் நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி 59* ரன்களும் ரவீந்திர ஜடேஜா 16* ரன்களும் எடுத்துள்ள நிலையில் 3வது நாள் முடிவுக்கு வந்த போது 289/3 ரன்கள் எடுத்துள்ள இந்தியா இன்னும் 191 ரன்கள் பின்தங்கியுள்ளது. முன்னதாக இந்தியா வென்ற 2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்று இந்தியாவுக்காக அறிமுகமாகி ஆரம்பத்தில் தடுமாறினாலும் 2021இல் மறக்க முடியாத காபா வெற்றியில் 91 ரன்கள் குவித்து கடந்த வருடம் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய சுப்மன் கில் இத்தொடரில் முதல் 2 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்தார்.

இருப்பினும் கடந்த டிசம்பரில் வங்கதேச டெஸ்ட் தொடரில் சதமடித்து கடந்த பிப்ரவரி நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமும், சதமும் விளாசி டி20 தொடரிலும் சதமடித்து உச்சகட்ட ஃபார்மில் இருப்பதால் கேஎல் ராகுலுக்கு பதிலாக பெற்ற வாய்ப்பில் சதமடித்துள்ள அவர் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரே காலண்டர் வருடத்தில் சதமடித்த முதல் இந்திய தொடக்க வீரராக வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

அதை விட தனது அதிரடியான வேகத்தால் ஆஸ்திரேலியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க் உலகில் விராட் கோலி உள்ளிட்ட டாப் பேட்ஸ்மேன்களை பல முறை அவுட் செய்து திணறடித்து வருவதை அனைவரும் அறிவோம். அப்படிப்பட்ட தரமான அவருக்கு எதிராக இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 140 பந்துகளை எதிர்கொண்டுள்ள சுப்மன் கில் 18 பவுண்டரி 2 சிக்சருடன் 130 ரன்களை 92.85 என்ற மிகச் சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். ஆனால் அவருக்கு எதிராக இதுவரை ஒரு முறை கூட அவுட்டாகவில்லை.

இதன் வாயிலாக தரமான மிட்சேல் ஸ்டார்க்கிற்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருமுறை கூட அவுட்டாகாமல் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற பாகிஸ்தானின் யூனிஸ் கான் சாதனையை தகர்த்துள்ள சுப்மன் கில் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சுப்மன் கில் : 130*
2. யூனிஸ் கான் : 112
3. ரோஹித் சர்மா : 95
4. குயின் டீ காக் : 75

இதையும் படிங்க:IND vs AUS : 14 மாதங்கள் கழித்து நிம்மதி பெருமூச்சு விட்ட விராட் கோலி, பிரைன் லாராவை முந்தி இந்திய மண்ணில் 5வது வீரராக புதிய சாதனை

முன்னதாக ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரது வரிசையில் 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்திய பேட்டிங் துறையில் அசத்தப்போகும் வருங்கால சூப்பர் ஸ்டாராக அறியப்படும் அவர் மிட்சேல் ஸ்டார்க் போன்ற தரமான பவுலரை இந்த இளம் வயதிலேயே இப்படி அசால்டாக டீல் செய்வது ரசிகர்களை பாராட்ட வைக்கிறது.

Advertisement