IND vs WI : சச்சினின் தனித்துமான சாதனையை தகர்த்து இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றிய சுப்மன் கில் – முழுவிவரம்

SHubman Gill Sachin Tendulkar
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 22-ஆம் தேதியான நேற்று துவங்கியது. கேப்டன் ரோகித் சர்மா ஓய்வெடுக்கும் நிலையில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்தியாவுக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 119 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அட்டகாசமான தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய கில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 64 (53) ரன்களில் ரன் அவுட்டானார்.

Dhawan 2

- Advertisement -

அடுத்ததாக களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயருடன் மீண்டும் ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் 2-வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தியபோது 10 பவுண்டரி 3 சிக்சருடன் 97 (99) ரன்களில் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.  அடுத்த சில ஓவர்களில் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த 5 பவுண்டரி 2 சிக்சருடன் 54 (57) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் நடுவரிசையில் வந்த சூர்யகுமார் யாதவ் 13 (14) ரன்களிலும் சஞ்சு சாம்சன் 12 (18) ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றி நிலையில் கடைசியில் தீபக் ஹூடா 27 (32) ரன்களும் அக்சர் பட்டேல் 21 (21) ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினர்.

போராடிய வெ.இ:
அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தப்பிய இந்தியா 308/7 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் மற்றும் மோட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதை தொடர்ந்து 309 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு சாய் ஹோப் 7 (18) ரன்களில் அவுட்டானாலும் அடுத்து ஜோடி சேர்ந்த கெய்ல் மேயர்ஸ் – ப்ரூக்ஸ் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு அற்புதமாக பேட்டிங் செய்து 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான தொடக்கம் கொடுத்தது. அதில் 46 (61) ரன்கள் எடுத்து ப்ரூக்ஸ் ஆட்டமிழக்க அடுத்த ஓவரிலேயே கெய்ல் மேயர்ஸ் 10 பவுண்டரி 1 சிக்சருடன் 75 (68) ரன்களில் அவுட்டானார்.

Siraj

அந்த நிலைமையில் பிரண்டன் கிங் நங்கூரமாக நின்றாலும் எதிர்ப்புறம் வந்த கேப்டன் நிக்கோலஸ் பூரன் 25 (26) ரன்களிலும் ரோவ்மன் போவல் 6 (7) ரன்னிலும் அவுட்டானார்கள். அப்போது வெற்றிக்காக போராடிக்கொண்டிருந்த பிரண்டன் கிங் 54 (66) ரன்களில் கடைசி நேரத்தில் ஆட்டமிழந்ததால் இந்தியா எளிதாக வென்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்த அகில் ஹொசைன் 32* (32) ரன்களும் ரோமரியா செபார்ட் 39* (25) ரன்களும் அதிரடியாக எடுத்ததால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

த்ரில் வெற்றி:
அந்த சூழலில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட போது அதை வீசிய முகமது சிராஜ் தடுமாற்றமாக 11 ரன்கள் கொடுத்தாலும் கடைசி பந்தில் கட்சிதமாக செயல்பட்டதால் 50 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 305/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்த இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் இந்த தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் சஹால், தாகூர் மற்றும் சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றிக்கு 97 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஷிகர் தவான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Shubman Gill

முன்னதாக இப்போட்டியில் தவானுடன் இஷான் கிசான் அல்லது ருதுராஜ் தொடக்க வீரராக களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயத்திலிருந்து திரும்பி சமீபத்திய இங்கிலாந்து டெஸ்டில் விளையாடிய சுமன் கில் நீண்ட நாட்கள் கழித்து இந்த ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். சொல்லப்போனால் தனது 4-வது ஒருநாள் போட்டியில் விளையாடி அவர் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தொடக்க வீரராக களமிறங்கி 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தார்.

- Advertisement -

சச்சினை முந்தி:
குறிப்பாக ஒருபுறம் தவான் மெதுவாக பேட்டிங் செய்ய மறுபுறம் அதிரடியாக ரன்களை குவித்த இவர் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அதிகபட்ச ஓபனிங் பார்ட்னர்ஷிப் ரன்கள் அமைத்த 3-வது ஜோடியாக தவானுடன் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

Gill 1

அந்தப் பட்டியல்:
1. ஷிகர் தவான் – அஜிங்க்ய ரஹானே : 132, 2017
2. ஷிகர் தவான் ரோகித் சர்மா : 123, 2019
3. ஷிகர் தவான் – சுப்மன் கில் : 119, 2022*

இதையும் படிங்க : IND vs WI : 90களில் அவுட்டாகி பரிதாப சாதனை படைத்தாலும் ரசிகர்களை மகிழ்வித்த ஷிகர் தவான் – வைரல் வீடியோ

அதைவிட ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இளம் வயதில் அரைசதம் அடித்த இந்திய தொடக்க வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையையும் அவர் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சுப்மன் கில் : 22 வருடம் 317 நாட்கள்*
2. சச்சின் டெண்டுல்கர் : 24 வருடம் 003 நாட்கள்

Advertisement