950 நாட்கள்.. பரிதாப பாபர் அசாமை முந்திய சுப்மன் கில்.. அப்ரிடியை முந்தி இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சிராஜ்

ICC Rankings
- Advertisement -

ரசிகர்களை உச்சகட்ட பரபரப்புடன் மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 8 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று செமி ஃபைனலுக்கும் சென்றுள்ளது. அதனால் 2011 போல நிச்சயம் இம்முறை இந்தியா சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஆழமாக ஏற்பட்டுள்ளது.

அதே போலவே 1992 போல கோப்பையை வென்று இந்தியர்களுக்கு அவர்களுடைய சொந்த மண்ணில் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்கிய பாகிஸ்தான் தடுமாற்றமாக செயல்பட்டு 4 தோல்விகளை சந்தித்ததால் லீக் சுற்றுடன் வெளியேறுவதற்கு தயாராக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

- Advertisement -

முந்திய கில் – சிராஜ்:
அதில் டாப் 10 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஏற்கனவே 2வது இடத்திலிருந்த இந்தியாவின் இளம் வீரர் சுப்மன் கில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை முந்தி உலகின் புதிய நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்துள்ளார். குறிப்பாக பாபர் அசாம் (824) இந்த உலகக்கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் சுமாராக பேட்டிங் செய்த நிலையில் தமக்கு கிடைத்த வாய்ப்புகளில் அசத்திய கில் அவரை விட 830 புள்ளிகளை பெற்று நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மறுபுறம் 950 நாட்கள் கழித்து நம்பர் ஒன் இடத்தை பாபர் அசாம் இழந்துள்ளார். சொல்லப்போனால் ஒரு மாதத்திற்கு முன்பாகவே பாபரை முந்தி முதலிடத்தைப் பிடிக்க வேண்டிய கில் காய்ச்சலால் இந்த உலகக்கோப்பையின் ஆரம்பக்கட்ட போட்டிகளில் பங்கேற்கவில்லை. இருப்பினும் தற்போது பாபர் அசாமுக்கு டாட்டா காட்டியுள்ள சுப்மன் கில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக 41 இன்னிங்ஸிலேயே முதலிடத்தை பிடித்துள்ள அவர் தோனிக்கு பின் (38 இன்னிங்ஸ்) அதிவேகமாக நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறிய இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக டாப் 10 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் முறையே 4, 6 இடங்களை பிடித்துள்ளனர். அதே போல டாப் 10 பவுலர்களுக்கான தரவரிசையில் இத்தொடரில் சுமாராக செயல்பட்ட சாகின் அப்ரிடி 5வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

இதையும் படிங்க: 950 நாட்கள்.. பரிதாப பாபர் அசாமை முந்திய சுப்மன் கில்.. அப்ரிடியை முந்தி இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சிராஜ்

மேலும் இலங்கைக்கு எதிராக 3 விக்கெட்டுகள் எடுத்து மிரட்டிய சிராஜ் 2வது இடத்திலிருந்து உலகின் புதிய நம்பர் ஒன் பவுலராக முதலிடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். அவருடன் குல்தீப் யாதவ் 4, பும்ரா 8, ஷமி 10 ஆகிய இடங்களைப் பிடித்து அசத்தியுள்ளார்கள். மேலும் ஆல் ரவுண்டர்கள் பிரிவில் ஜடேஜா மட்டும் 10வது இடத்தில் இருக்கும் நிலையில் டாப் 10 அணிகள் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் ஒருநாள் அணியாக ஜொலித்து வருகிறது.

Advertisement