எங்க கேரக்ட்டரை புரிஞ்சுக்காம ஆப்கானிஸ்தான் தப்பு பண்ணிட்டாங்க.. மேக்ஸ்வெலை பாராட்டிய பாண்டிங்

Ricky Ponting 2
- Advertisement -

இந்தியாவில் பரபரப்பான தருணங்களுடன் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 7ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடி இப்ராஹிம் ஜாட்ரான் 129 ரன்கள் எடுத்த பதிவியுடன் 292 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஆனால் அதைத் துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர், மார்னஸ் லபுஸ்சேன், மார்ஷ் உள்ளிட்ட டாப் 7 பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே ஆப்கானிஸ்தானின் தரமான பந்து வீச்சில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்கள். அதனால் 91/7 என ஆரம்பத்திலேயே சரிந்த ஆஸ்திரேலிய கண்டிப்பாக தோல்வியை சந்திக்கும் என்று அனைவரும் நினைத்தபோது மிடில் ஆடரில் நங்கூரமாக சொல்லி அடித்த கிளன் மேக்ஸ்வெல் காயத்தையும் பொருட்படுத்தாமல் 21 பவுண்டரி 10 சிக்சர்களை பறக்க விட்டு 201* (128) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பாண்டிங் பாராட்டு:
குறிப்பாக கேப்டன் கமின்ஸ் 12* ரன்கள் எடுத்து கை கொடுத்ததை பயன்படுத்திய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் சேசிங் செய்கையில் இரட்டை சதமடித்த முதல் வீரராக மாபெரும் உலக சாதனை படைத்து காலத்திற்கும் மறக்க முடியாத வெற்றியை ஆஸ்திரேலியாவுக்கு பெற்றுக் கொடுத்தார். இந்நிலையில் அப்போட்டியில் சில கேட்ச்களை தவற விட்டதை விட ரசித் கான் போன்ற சில ஆப்கானிஸ்தான் வீரர்கள் டேவிட் வார்னர், மார்ஷ் போன்ற ஆஸ்திரேலிய வீரர்களிடம் வாம்பிழுத்ததே இந்த சரவெடிக்கு காரணம் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சீண்டினால் ஆஸ்திரேலியர்கள் சும்மா விடமாட்டார்கள் என்ற குணத்தை அறியாமல் ஆப்கானிஸ்தான் எழுச்சியை காட்டியதாக தெரிவிக்கும் அவர் இனிமேல் தாமே நினைத்தாலும் மீண்டும் அடிக்க முடியாத அளவுக்கு கிளன் மேக்ஸ்வெல் மகத்தான இன்னிங்ஸ் விளையாடியதாகவும் பாராட்டியுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த பல வருடங்களாக விளையாடி கிரிக்கெட்டில் இருக்கும் நான் இது போன்றவற்றை பார்த்ததில்லை”

- Advertisement -

“சொல்லப்போனால் இது போன்ற நிகழ்வு மீண்டும் நடந்தால் நான் ஆச்சரியப்படுவேன். ஏனெனில் ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியினர் ஆஸ்திரேலியர்களிடம் எழுச்சியை காண்பிக்க முயற்சித்தனர். அதற்காக அவர்கள் வாய்மொழியாக சிலவற்றையும் சொன்னார்கள். அவர்களிடம் பாடி லாங்குவேஜும் சிறப்பாக இருந்தது. அவர்கள் முடிந்தளவுக்கு ஆஸ்திரேலியாவுக்கு அழுத்தத்தை கொடுக்க முயற்சித்தனர்”

இதையும் படிங்க: எங்க கேரக்ட்டரை புரிஞ்சுக்காம ஆப்கானிஸ்தான் தப்பு பண்ணிட்டாங்க.. மேக்ஸ்வெலை பாராட்டிய பாண்டிங்

“இருப்பினும் சில கேட்ச்களை தவற விட்டதை பயன்படுத்திய மேக்ஸ்வெல் எஞ்சியவற்றை வரலாற்றாக மாற்றியுள்ளார். இந்த இன்னிங்ஸ் பற்றி நாம் நீண்ட காலம் பேசுவோம். ஏனெனில் ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 0.3% மட்டுமே வெற்றி பெறுவதற்கு வாய்ப்பிருந்தது. அந்தளவுக்கு மேக்ஸ்வெல் மிராக்கிள் இன்னிங்ஸ் விளையாடினார். கமின்ஸ் – மேக்ஸ்வெல் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து பேசி சிறப்பாக விளையாடினார்கள்” என்று கூறினார்.

Advertisement