3 இரட்டைசதம் அடித்த ரோஹித் சர்மா கூட செய்யாத சம்பவத்தை நிகழ்த்தி – மேக்ஸ்வெல் செய்த அற்புதம்

Maxwell-and-Rohit
Advertisement

ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற நடப்பு 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் 39-ஆவது லீக் ஆட்டத்தில் நம்ப முடியாத வெற்றியை ஆஸ்திரேலிய அணிக்கு பரிசளித்த மேக்ஸ்வெல்லின் சிறப்பான ஆட்டம் அனைவரது மத்தியிலும் புகழப்பட்டு வருகிறது. குறிப்பாக நேற்றைய போட்டியில் 292 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சின் காரணமாக துவக்கத்திலேயே மிகப்பெரிய சரிவை கொண்டது.

குறிப்பாக ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களுக்குள் 91 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து தடுமாறிய வேளையில் மீதமுள்ள மூன்று விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு 201 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது. அதனால் நிச்சயம் 90 சதவீதத்திற்கு மேல் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற சாத்தியமே கிடையாது என்ற நிலையில் இருந்தது.

- Advertisement -

அவ்வேளையில் விஸ்வரூபம் எடுத்த மேக்ஸ்வெல் 128 பந்துகளை சந்தித்து 21 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் என தனி ஒருவனாக இரட்டை சதம் விளாசி 201 ரன்கள் குவித்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். எட்டாவது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல் மற்றும் கம்மின்ஸ் 202 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வேளையில் அதில் கம்மின்ஸ் 68 பந்துகளை சந்தித்து வெறும் 12 ரன்கள் மட்டுமே குவித்தார்.

மற்றபடி கிட்டத்தட்ட 190 ரன்கள் வரை (உதிரிகளையும் சேர்த்து) மேக்ஸ்வெல் தனிநபராக அடித்து ஆஸ்திரேலிய அணியை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் நேற்று அவர் அடித்த இந்த இரட்டை சதத்தின் மூலம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி அசத்தியுள்ளார். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் நிறைய வீரர்கள் இரட்டை சதம் அடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மூன்று முறை ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசி அசத்தியிருக்கிறார். ஆனாலும் அவரே செய்யாத ஒரு சாதனையை மேக்ஸ்வெல் செய்துள்ளது தற்போது அனைவரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை இரட்டை சதம் அடித்த அனைவருமே முதலில் பேட்டிங் செய்யும்போது அடித்தவர்கள். ஆனால் மேக்ஸ்வெல் மட்டும் தான் சேசிங்கில் அழுத்தமான சூழலில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : திட்டலாம்ன்னு நெனச்சேன்.. தனது அணி கேப்டன் ஷாகிப்பை விளாசிய வங்கதேச கோச் ஆலன் டொனால்ட்

அதோடு உலகக்கோப்பை போட்டிகளில் ஆறாவது மற்றும் அதற்கும் கீழ் இறங்கிய ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ஸ்கோராக இந்த இரட்டை சதம் (201 ரன்கள்) பதிவாகியுள்ளது. அதோடு ஆஸ்திரேலிய அணி சார்பாக முதல் வீரராகவும் அவர் இந்த இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார். இப்படி இந்த ஒரே இரட்டை சதத்தின் மூலம் மேக்ஸ்வெல் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement