திட்டலாம்ன்னு நெனச்சேன்.. தனது அணி கேப்டன் ஷாகிப்பை விளாசிய வங்கதேச கோச் ஆலன் டொனால்ட்

Allan Donald
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 6ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்கடித்தது. ஆனால் அந்த போட்டியில் களமிறங்கிய இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தம்முடைய ஹெல்மெட் கடைசி நேரத்தில் பழுதாகி இருந்ததை பார்த்து மாற்றிக் கொண்டிருந்த போது வங்கதேச அணியினர் காலதாமதம் செய்வதாக நடுவரிடம் அவுட் கேட்டார்கள்.

அதை சோதித்த நடுவர்கள் முந்தைய பேட்ஸ்மேன் அவுட்டாகி சென்ற பின் அடுத்த 2 நிமிடத்திற்குள் முதல் பந்தை அதற்கடுத்த பேட்ஸ்மேன் எதிர்கொள்ள வேண்டும் என்ற அடிப்படை விதிமுறையை மேத்யூஸ் மீறியதால் அவுட் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என்று மேத்யூஸ் நிலைமையை எடுத்துரைக்கும் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கொஞ்சமும் செவி சாய்க்காமல் அவுட்டை 2 முறை கேட்டு வாங்கியது ரசிகர்களை கோபமடைய வைத்தது.

- Advertisement -

விளாசிய பயிற்சியாளர்:
அதைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ஷாகிப்பை அவுட் செய்த போது “நேரமாச்சு கிளம்புங்க” என்ற வகையில் மேத்யூஸ் பதிலடி கொடுத்து பழி தீர்த்தார். அதன் பின் போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கை கொடுத்துக் கொள்ளாமல் பகையுடன் சென்றதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதியில் இவ்வளவு கேவலமான வேலையை செய்த சாகிப் மற்றும் வங்கதேசம் மீதிருந்த மரியாதை போய்விட்டதாக விமர்சித்த மேத்யூஸ் தாம் 2 நிமிடத்திற்குள் களத்திற்கு வந்த வீடியோ ஆதாரத்தை ஐசிசியிடம் முறையிட்டு நடுவர்களின் தவறை சுட்டி காட்டினார்.

இந்நிலையில் இந்த நிகழ்வுகளை ஃபெவிலியனிலிருந்து பார்க்க முடியாமல் களத்திற்குள் சென்று போதும் நிறுத்துங்கள் என்று தம்முடைய அணியின் கேப்டன் ஷாகிப்பை திட்டலாம் என நினைத்ததாக தென்மாப்பிரிக்க ஜாம்பவான் மற்றும் வங்கதேசத்தின் பவுலிங் பயிற்சியாளர் ஆலன் டொனால்ட் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அந்த சமயத்தில் நீங்கள் பரவாயில்லை நண்பா சீக்கிரமாக ஹெல்மெட்டை சரி செய்து கொண்டு விளையாடுங்கள் என்று சொல்வதே சரியானதாக இருந்திருக்கும். அந்த நிகழ்வு நடந்த போது களத்திற்குள் சென்று “போதும் போதும் நாங்கள் இதற்கு சாதகமாக நிற்கவில்லை. நாங்கள் இது போன்ற செயல்களுக்கு பின்புலத்தில் நிற்கும் அணியல்ல” என்று சொல்ல நினைத்தேன்”

இதையும் படிங்க: ஆஸி வெற்றியால்.. பாகிஸ்தானுக்கு அடித்த அதிர்ஷ்டம்? 1 இடத்துக்கு 4 அணிகள் போட்டி.. இந்தியாவுடன் மோதப்போவது யார்?

“இறுதியில் போட்டி முடிந்து ஹோட்டல் அறைக்குள் சென்று நான் என்ன நடந்தது என்று வியப்பில் அமர்ந்தேன். குறிப்பாக இலங்கை அணியினர் எங்களுக்கு கை கொடுக்காமல் சென்றனர். அந்த சமயத்தில் கோபத்திலிருந்த நான் முதல் ஆளாக சென்று அவர்களுக்கு கை கொடுக்க வேண்டும் என்று விரும்பினேன். இவ்வாறு நான் நினைப்பதற்காக என்னை பழைய காலத்து ஆள் என்று இப்போதைய கிரிக்கெட்டர்கள் நினைக்கலாம். ஆனால் கிரிக்கெட்டில் இது போன்ற நிகழ்வுகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதை என்னுடைய எண்ணமாகும்” என்று கூறினார்.

Advertisement