ஆஸி வெற்றியால்.. பாகிஸ்தானுக்கு அடித்த அதிர்ஷ்டம்? 1 இடத்துக்கு 4 அணிகள் போட்டி.. இந்தியாவுடன் மோதப்போவது யார்?

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 48 போட்டிகள் கொண்ட லீக் சுற்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 8 லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து செமி ஃபைனல் சுற்றும் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.

அதே போல நெதர்லாந்து, இந்தியாவுக்கு எதிராக சந்தித்த தோல்வியை தவிர்த்து எஞ்சிய போட்டிகளில் வென்ற காரணத்தால் தென்னாப்பிரிக்காவும் 2வது அணியாக செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த சூழ்நிலையில் நவம்பர் 7ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா 3வது அணியாக செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது.

- Advertisement -

இந்தியாவுடன் மோதுவது யார்:
குறிப்பாக போட்டியில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 292 ரன்கள் துரத்திய ஆஸ்திரேலியா 91/7 என சரிவை சந்தித்ததால் தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் தனி ஒருவனாக காயத்துடன் அடித்து நொறுக்கிய மேக்ஸ்வெல் 201* (128) ரன்கள் விளாசி மறக்க முடியாத மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இதன் காரணமாக தங்களுடைய கடைசி போட்டியில் ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் வென்றாலும் தோற்றாலும் புள்ளிப்பட்டியலில் 2, 3 இடங்களை பிடிப்பது உறுதியாகியுள்ளது.

அதனால் நவம்பர் 16ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் 2வது அரையிறுதியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதுவதும் உறுதியாகியுள்ளது. இந்நிலை நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் இவர் முதல் அரை இறுதியில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவுடன் மோதுவதற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 4 அணிகளுக்கு வாய்ப்புகள் இருக்கிறது.

- Advertisement -

1. அதில் நவம்பர் 9இல் நடைபெறும் தங்களின் கடைசி போட்டியில் இலங்கையை தோற்கடித்தால் எஞ்சிய 3 அணிகளை விட அதிக ரன்ரேட் கொண்டிருப்பதன் காரணமாக நியூசிலாந்து 4வது அணியாக செமி ஃபைனலுக்கு தகுதி பெற பிரகாச வாய்ப்புள்ளது. ஒருவேளை அப்போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது தோல்வியை சந்தித்தாலோ பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகள் அதனுடைய கடைசிப் போட்டியில் தோற்றால் நியூசிலாந்து உள்ளே வந்துவிடும்.

2. ஆப்கானிஸ்தானை போராடி ஆஸ்திரேலியா தோற்கடித்ததால் பாகிஸ்தானுக்கு செமி ஃபைனல் அதிர்ஷ்டம் இன்னும் காத்திருக்கிறது. அதற்கு முதலில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை முறையே இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் தோற்கடிக்க வேண்டும். மேலும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் பாகிஸ்தான் பெரிய வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். இதில் ஒன்று தவறினாலும் பாகிஸ்தான் வீட்டுக்கு கிளம்பிவிடும்.

- Advertisement -

3. ஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்ற ஆப்கானிஸ்தான் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானை விட குறைந்த ரன்ரேட் கொண்டுள்ளது. அதனால் தனது கடைசி போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடிக்க வேண்டிய அந்த அணி நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் அதனுடைய கடைசி போட்டியில் தோற்க வேண்டும் என்ற பரிதாபத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஈஸியா ஜெயிக்க வேண்டிய மேட்சை ஆப்கானிஸ்தான் அணி தோக்க இவர்தான் காரணம் – எல்லாம் இவர் தப்பு தான்

4. நெதர்லாந்துக்கு இங்கிலாந்து மற்றும் இந்தியாவை மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தால் மட்டுமே செமி ஃபைனலுக்கு செல்ல முடியும் என்ற அசாத்தியமற்ற வாய்ப்பு காத்திருக்கிறது.

Advertisement