ஈஸியா ஜெயிக்க வேண்டிய மேட்சை ஆப்கானிஸ்தான் அணி தோக்க இவர்தான் காரணம் – எல்லாம் இவர் தப்பு தான்

Mujeeb
Advertisement

ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற நடப்பு 50 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா அணியானது 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி :

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பாக துவக்க வீரர் இப்ராஹீம் ஜாட்ரான் 129 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் 292 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி சேஸிங்கை துவங்கியது.

- Advertisement -

இந்த போட்டியின் துவக்கத்தில் இருந்தே ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 18.3 ஓவர்களில் 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த வேளையில் ஆஸ்திரேலிய அணி 150 ரன்கள் கூட தாண்டாது என்று பலரும் நினைத்து இருப்பார்கள்.

ஆனால் அந்த நேரத்தில் ஜோடி சேர்ந்த கிளன் மேக்ஸ்வெல் மற்றும் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆகியோர் மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து இறுதிவரை அடுத்து விக்கெட் விழாமல் போட்டியை வெற்றிகரமாக முடித்தும் கொடுத்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 46.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 293 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பாக மேக்ஸ்வெல் இரட்டை சதம் விளாசி தனி ஒருவனாக அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் இந்த போட்டியின் போது கிளன் மேக்ஸ்வெல் 33 ரன்களில் கொடுத்த எளிதான கேட்சை முஜிபுர் ரஹ்மான் பைன் லெக் திசையில் தவறவிட்டார். அந்த வாய்ப்பினை பயன்படுத்திய மேக்ஸ்வெல் 128 பந்துகளை சந்தித்து 21 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் என 201 ரன்கள் அடித்து வெற்றியை பரிசளித்தார்.

இதையும் படிங்க : இப்படி ஒரு இன்னிங்ஸ்ஸை என் லைஃப் டைம்ல பாத்தது இல்ல. மேக்ஸ்வெல்லை பாராட்டி – சச்சின் வெளியிட்ட வாழ்த்து

முஜிபுர் ரகுமான் மட்டும் 33 ரன்களில் மேக்ஸ்வெல்லின் கேட்சை பிடித்திருந்தால் நிச்சயம் ஆப்கானிஸ்தானை ரன் ரேட் அடிப்படையிலும் மாபெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பினை கூட பிரகாசப்படுத்தி இருக்கலாம். முஜிபுர் ரஹ்மான் களத்தில் மெத்தனமாக நடந்து கொண்டதே இந்த தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement