இப்படி ஒரு இன்னிங்ஸ்ஸை என் லைஃப் டைம்ல பாத்தது இல்ல. மேக்ஸ்வெல்லை பாராட்டி – சச்சின் வெளியிட்ட வாழ்த்து

Maxwell-1
- Advertisement -

மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்று முடிந்த நடப்பு 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் ஆட்டத்தில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா அணியானது மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி சாதனை வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்கான வாய்ப்பினை உறுதி செய்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 291 ரன்கள் குவித்தது.

பின்னர் 292 ரன்கள் அடித்தால் வெற்றி இன்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதால் கைவசம் இருந்த மூன்று விக்கெட்டுகளை வைத்து 201 ரன்கள் அடிக்க வேண்டிய இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டது.

- Advertisement -

ஆனால் அந்த நேரத்தில் ஜோடி சேர்ந்த அதிரடி வீரர் மேக்ஸ்வெல் மற்றும் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆகியோர் அசத்தலான பார்ட்னர்ஷிப்பை அமைத்து இறுதிவரை விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் போட்டியை அட்டகாசமாக முடித்துக் கொடுத்தனர். அதிலும் குறிப்பாக பேட் கம்மின்ஸ் 68 பந்துகளை சந்தித்து 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஒருபுறம் நிலைத்து நிற்க மற்றொருபுறம் சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசிய மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 21 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் என 201 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

அதிலும் சதத்தைக் கடந்த பிறகு தனக்கு ஏற்பட்ட தசைப் பிடிப்பையும் பொருட்படுத்தாமல் களத்தில் நின்று ரன் ஓடாமல் வெறும் பவுண்டரிகளாக விளாசி அந்த அணியை மீட்டெடுத்த மேக்ஸ்வெல் இறுதியில் இரட்டை சதத்தை (201) பூர்த்தி செய்து 3 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிக்கும் அழைத்துச் சென்றார்.

- Advertisement -

அவரது இந்த ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்த வேளையில் பலரது மத்தியிலும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் தனது சமூக வலைதள பக்கத்தில் மேக்ஸ்வெல்லின் ஆட்டம் குறித்தும் புகழ்ந்து சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த கருத்தில் : ஆப்கானிஸ்தான் சார்பாக இப்ராஹீம் ஜாட்ரான் மிகச் சிறப்பான இன்னிங்ஸ்ஸை விளையாடி அந்த அணியை நல்ல நிலைக்கு கொண்டு சென்றார்.

இதையும் படிங்க : வெறும் 12 ரன்ஸ்.. 52 வருட ஒருநாள் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை படைத்த மேக்ஸ்வெல் – கமின்ஸ் ஜோடி

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 70 ஓவர்கள் வரை மிகச் சிறப்பாக விளையாடி இருந்தும் கடைசி 25 ஓவர்களில் மேக்ஸ்வெல் அனைத்தையும் மாற்றிவிட்டார். ஒரு அழுத்தமான சூழ்நிலையில் அவர் விளையாடிய ஆட்டம் மிக அற்புதமாக இருந்தது. அவரது இந்த இன்னிங்ஸ்தான் நான் வாழ்நாளில் பார்த்த மிகச் சிறப்பான ஒரு இன்னிங்ஸ் என மேக்ஸ்வெல்லை புகழ்ந்து சச்சின் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement