வெறும் 12 ரன்ஸ்.. 52 வருட ஒருநாள் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை படைத்த மேக்ஸ்வெல் – கமின்ஸ் ஜோடி

Pat Cummins Glenn Maxwell
Advertisement

இந்தியாவில் உலக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் நவம்பர் 7ம் தேதி மும்பையில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா செமி ஃபைனல் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் இப்ராகிம் ஜாட்ரான் 129* ரன்கள் எடுத்த உதவியுடன் 292 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர், மார்ஷ், ஹெட் உள்ளிட்ட அனைத்து வீரர்களும் ஆரம்பத்திலேயே குறைந்த ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் 91/7 என மெகா வீழ்ச்சியை சந்தித்த ஆஸ்திரேலியா கண்டிப்பாக தோல்வியை சந்திக்கும் அனைவரும் நினைத்தபோது நான் இருக்கும் வரை அது நடக்காது என்ற வகையில் மிடில் ஆடரில் சொல்லி அடித்த கிளன் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடினார்.

- Advertisement -

மாபெரும் உலக சாதனை:
அதற்கு கேப்டன் பட் கமின்ஸ் ஒருவரும் நங்கூரமாக நின்று கை கொடுத்ததை பயன்படுத்திய மேக்ஸ்வெல் மறுபுறம் ஆப்கானிஸ்தான் பவுலர்களை வெளுத்து வாங்கி சதமடித்தார். நேரம் செல்ல செல்ல காயத்தையும் பொருட்படுத்தாமல் வெளுத்து வாங்கிய அவர் மொத்தம் 21 பவுண்டரி மற்றும் 10 சிக்சர்களை பறக்க விட்டு இரட்டை சதமடித்து 201* (128) ரன்களை விளாசினார்.

அதனால் 46.5 ஓவரிலேயே இலக்கை எட்டிய ஆஸ்திரேலியா காலத்திற்கும் மறக்க முடியாத மகத்தான வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் சேசிங் செய்யும் போது இரட்டை சதமடித்த முதல் வீரர் என்பது போன்ற ஏராளமான சாதனைகளை படைத்து ரசிகர்கள் நெஞ்சத்தில் நீங்காத இடம் பிடித்த மகத்தான இன்னிங்ஸ் விளையாடிய கிளன் மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

ஆனால் அவர் இந்தளவுக்கு அபாரமாக விளையாடுவதற்கு கேப்டன் பட் கமின்ஸ் முக்கிய காரணமாக இருந்தார் என்றே சொல்லலாம். ஏனெனில் 7 விக்கெட்கள் சரிந்து ஆஸ்திரேலியா திண்டாடிய போது 19வது ஓவரில் களமிறங்கிய அவர் கொஞ்சம் தவறி தன்னுடைய விக்கெட்டை கொடுத்திருந்தாலும் மேக்ஸ்வெல் போராட்டத்தை தாண்டி தோல்வி கிடைத்திருக்கும். ஆனால் அதற்கெல்லாம் வளைந்து கொடுக்காமல் 68 பந்துகளை எதிர்கொண்ட அவர் 12* ரன்களை 17.65 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து மறக்க முடியாத மகத்தான வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

இதையும் படிங்க: இந்தியாவில் அனல் பறக்க நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 7ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற

அதை விட இந்த 12 ரன்களை வைத்தே 52 வருட ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 8வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் ஜோடி மற்றும் அதிகபட்ச ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற இரட்டை உலக சாதனையையும் இவர்கள் படைத்துள்ளனர். அந்த பட்டியல்:
1. கிளன் மேக்ஸ்வெல் – பட் கமின்ஸ் : 202*, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2023*
2. ஆண்ட்ரூ ஹால் – ஜஸ்டின் கெம்ப் : 138*, இந்தியாவுக்கு எதிராக, 2006

Advertisement