ரிச்சர்ட்ஸ், கபில் தேவின் மாஸ் சாதனையை தூளாக்கிய மேக்ஸ்வெல்.. ஆஸியை காப்பாற்றி 5 புதிய உலக சாதனை

Glen Maxwell 2
Advertisement

இந்தியாவில் அனல் பறக்க நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 7ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா செமி ஃபைனல் வாய்ப்பை உறுதி செய்தது. அப்போ போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் இப்ராஹீம் ஜாட்ரான் சதமடித்து 129* ரன்கள் எடுத்த உதவியுடன் 291 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர், லபுஸ்ஷேன், மார்ஷ் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்ததால் 91/7 என சரிந்து ஆரம்பத்திலேயே தோல்வியின் பிடியில் சிக்கியது. ஆனால் அப்போது கேப்டன் கம்மின்ஸ் உதவியுடன் மிடில் ஆர்டரில் நங்கூரமாக காயத்தையும் பொருட்படுத்தாமல் சொல்லி அடித்த கிளன் மேக்ஸ்வெல் 21 பவுண்டரி 10 சிக்சருடன் இரட்டை சதமடித்து 201* (128) ரன்கள் விளாசி காலத்திற்கும் மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

சாதனை பட்டியல்:
1. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டிலும் உலகக்கோப்பை வரலாற்றிலும் சேசிங் செய்யும் போது இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் ரோஹித் சர்மா, கெயில் உட்பட அனைவருமே முதலில் பேட்டிங் செய்த போது தான் இரட்டை சதத்தை அடித்திருந்தார்கள்.

2. அத்துடன் 128 பந்துகளில் 201* ரன்கள் அடித்த அவர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக இரட்டை சதமடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் (138 பந்துகள்) சாதனையை தக்ர்த்து புதிய உலக சாதனை படைத்தார்.

- Advertisement -

3. ஒருநாள் கிரிக்கெட்டிலும் உலக கோப்பையிலும் சேசிங் செய்யும் போது அதிகபட்ச ஸ்கோர் (201*) பதிவு செய்த வீரர் என்ற இரட்டை உலக சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன் ஒருநாள் கிரிக்கெட்டில் ஜிம்பாப்பேவுக்கு எதிராக பாகிஸ்தானின் பஃக்கர் ஜமான் 193 ரன்களும் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் ஆண்ட்ரூஸ் ஸ்டார்ஸ் 158 (2011இல்) ரன்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

4. அது போக உலகக்கோப்பை வரலாற்றில் 6 அல்லது அதற்கு கீழ் வரிசையில் களமிறங்கி இரட்டை சதமடித்த முதல் வீரர் மற்றும் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற இரட்டை வரலாற்று சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 1983 உலகக் கோப்பையில் ஜிம்பாபேவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை இந்தியா இழந்து திணறிய போது கபில் தேவ் 175* ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

5. ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் ஸ்பின்னர்களுக்கு எதிராக அதிக ரன்கள் (149) அடித்த வீரர் என்ற உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் அமெரிக்காவுக்கு எதிராக ஜிம்பாப்வே வீரர் சீன் வில்லியம்ஸ் 132 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: எனக்கு அந்த நம்பிக்கை இருந்துச்சி அதனால தான் 201 ரன் அடிச்சேன். வெற்றிக்கு பிறகு – ஆட்டநாயகன் மேக்ஸ்வெல் பேட்டி

6. இதுபோக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் எஞ்சிய வீரர்களில் யாருமே 30 ரன்கள் கூட அடிக்காத போது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 1984இல் இங்கிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸின் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் 189* ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த ஆஸ்திரேலிய வீரர் ஆகிய வரலாற்றையும் மேக்ஸ்வெல் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement