எனக்கு அந்த நம்பிக்கை இருந்துச்சி அதனால தான் 201 ரன் அடிச்சேன். வெற்றிக்கு பிறகு – ஆட்டநாயகன் மேக்ஸ்வெல் பேட்டி

Maxwell
Advertisement

ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் ஆட்டமானது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் நம்ப முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்த ஆஸ்திரேலிய அணியானது மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த உலகக் கோப்பை தொடருக்கான அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்திருந்தது. அந்த வகையில் இந்த போட்டியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 291 ரன்களை குவித்தது.

பின்னர் 292 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சுக்கு எதிராக ஒரு கட்டத்தில் 91 ரன்களுக்கு எல்லாம் 7 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதனால் நிச்சயம் அந்த அணியால் 150 ரன்களை கூட அடிக்க முடியாது என்று பலரும் நினைத்து இருப்பார்கள்.

- Advertisement -

ஆனால் அந்த நேரத்தில் களத்தில் இருந்த மேக்ஸ்வெல் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் அசத்தலான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். கம்மின்ஸ் ஒருபுறம் நிலைத்து நிற்க மறுபுறம் மேக்ஸ்வெல் அதிரடியை காட்டினார். குறிப்பாக 76 பந்துகளில் சதம் அடித்த மேக்ஸ்வெல் அதன்பிறகு தசை பிடிப்புடனும் தொடர்ச்சியாக விளையாடினார். ஒரு கட்டத்தில் மைதானத்திலிருந்து அவர் தசைப்பிடிப்பு வலி தாங்காமல் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த வலியை பொறுத்துக் கொண்டு 128 பந்துகளை சந்தித்த அவர் 21 பவுண்டரி 10 சிக்ஸர்கள் என 201 ரன்கள் குவித்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இந்நிலையில் போட்டி முடிந்து அவரது இந்த பிரமாதமான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பின்னர் தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய ஆட்டநாயகன் மேக்ஸ்வெல் கூறுகையில் : இந்த மைதானத்தில் பீல்டிங் செய்யும்போது வெப்பம் அதிகமாக இருந்தது. இது போன்ற வெப்பமான இடத்தில் நான் அதிகமாக பயிற்சியை மேற்கொண்டது கிடையாது.

- Advertisement -

இருந்தாலும் நான் இந்த போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைத்தேன். எங்கள் அணி ஒரு கட்டத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்தபோது என்னுடைய பேட்டிங் திட்டத்தை நான் தெளிவாக வைத்துக் கொண்டேன். அதாவது எந்த இலக்கையும் துரத்துவதற்கு என்னால் முடியும் என்ற நம்பிக்கையை வைத்துக்கொண்டு பாசிட்டிவாக விளையாடினேன். அந்த வகையில் என்னால் மிகச் சிறப்பாக முடிந்தது.

இதையும் படிங்க : அந்த தப்பு செஞ்சதால் வெற்றி தவறிப்போச்சு.. போராடியும் அவர நிறுத்தவே முடில.. ஆப்கானிஸ்தான் கேப்டன் சோகமான பேட்டி

ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிறப்பாகவே பந்து வீசினார்கள். ஆனாலும் என்னுடைய இந்த ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது. என்னுடைய வாய்ப்பை நான் எடுத்துக் கொண்டு மிகச் சிறப்பாக செயல்பட்டதில் பெருமை அடைகிறேன். முதல் இரண்டு போட்டிகளில் நாங்கள் தோற்றதும் எங்களை பற்றி நிறைவே எழுதினார்கள். ஆனால் ஒரு அணியாக தற்போது நாங்கள் நல்ல நம்பிக்கையுடன் அரையிறுதிக்கான வாய்ப்பையும் உறுதி செய்துள்ளோம் என மேக்ஸ்வெல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement