அந்த தப்பு செஞ்சதால் வெற்றி தவறிப்போச்சு.. போராடியும் அவர நிறுத்தவே முடில.. ஆப்கானிஸ்தான் கேப்டன் சோகமான பேட்டி

Shahidhi 2
- Advertisement -

இந்தியாவில் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் நவம்பர் 7ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 291 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இப்ராகிம் ஜாட்ரான் உலகக் கோப்பையில் சதமடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரராக சாதனை படைத்து 129* (143) ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 292 ரன்களை துரத்தி ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 18, ட்ராவிஸ் ஹெட் 0, மிட்சேல் மார்ஷ் 24, மார்னஸ் லபுஸ்ஷேன் 14, ஜோஸ் இங்லிஷ் 0, மார்க்கஸ் ஸ்டோனிஸ் 6 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்கள்.

- Advertisement -

நிறுத்த முடியல:
அதனால் 91/7 என ஆரம்பத்திலேயே பெரிய சரிவை சந்தித்து ஆஸ்திரேலியாவின் வெற்றி கேள்விக்குறியான போது மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய கிளன் மேக்ஸ்வெல் ஆப்கானிஸ்தான் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு வேகமாக ரன்களை சேர்த்தார். குறிப்பாக கேப்டன் கமின்ஸ் சிங்கிள்களாக எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்றியதை பயன்படுத்திய அவர் சரவெடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து வெற்றிக்கு போராடினார்.

நேரம் செல்ல செல்ல காயத்தை சந்தித்தும் அசராத அவர் தொடர்ந்து பட்டையை கிளப்பும் ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 பவுண்டரி 10 சிக்ஸருடன் இரட்டை சதமடித்து 201* (128) ரன்கள் விளாசி 46.5 ஓவரிலேயே ஆஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி பெற வைத்தார். அவருடன் பட் கமின்ஸ் 12* (68) ரன்கள் எடுத்ததால் ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நவீன், ரசித் கான், ஓமர்சாய் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தும் வெற்றி காண முடியவில்லை.

- Advertisement -

இந்நிலையில் இப்போட்டியில் சில கேட்ச்களை தவற விட்டது தோல்விக்கு காரணமாக அமைந்ததாக ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷாகிதி தெரிவித்துள்ளார். அதன் பின் தடுத்து நிறுத்த முடியாத அளவுக்கு மேக்ஸ்வெல் அபாரமாக விளையாடியதாக பாராட்டும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “மிகவும் ஏமாற்றம். கிரிக்கெட் ஒரு வேடிக்கையான விளையாட்டு. எங்களால் இதை நம்ப முடியவில்லை. எங்களுடைய பவுலர்களின் அசத்தலான ஆட்டத்தால் நல்ல துவக்கத்தை பெற்றும் சில கேட்ச்களை தவற விட்டது தோல்வியை கொடுத்தது”

இதையும் படிங்க: இதை பத்தி பேச வார்த்தையே இல்ல.. சத்தியமா இந்த மாதிரி ஒரு ஆட்டம் சேன்ஸ்ஸே இல்ல – வெற்றிக்கு பின் கம்மின்ஸ் பேட்டி

“அதன் பின் மேக்ஸ்வெலை எங்களால் நிறுத்த முடியவில்லை. அவர் விளையாடிய ஷாட்டுகளுக்கு நான் பாராட்டுகளை கொடுக்கிறேன். எங்களுடைய பவுலர்கள் முடிந்தளவுக்கு முயற்சித்தும் அவர் எவ்விதமான வாய்ப்பையும் கொடுக்கவில்லை. எங்களுடைய அணியின் நல்ல செயல்பாடுகளால் பெருமையடைந்தாலும் இத்தோல்வி ஏமாற்றத்தை கொடுக்கிறது. ஆனால் இதுவும் விளையாட்டின் ஒரு அங்கம் என்று நாங்கள் நினைக்கவில்லை. தென்னாபிரிக்காவுக்கு எதிராக நாங்கள் வலுவாக கம்பேக் கொடுப்போம். உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்காக முதல் முறையாக உலக கோப்பையில் சதமடித்த இப்ராஹிமுக்காக நான் பெருமைப்படுகிறேன்” என்று கூறினார்.

Advertisement