மெகா பார்ட்னர்ஷிப் போட்டு ஆஸியை சாய்த்த ஸ்ரேயாஸ் – கில் ஜோடி.. சச்சின் – லக்ஷ்மனின் 22 வருட சாதனையை தூளாக்கி புதிய வரலாறு

- Advertisement -

ஆசிய கோப்பை வெற்றியை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 2 – 0* என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியுள்ளது. குறிப்பாக நேற்று இந்தூரில் நடைபெற்ற 2வது போட்டியில் 99 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்துள்ளது.

அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட இந்தியா வரலாற்றிலேயே அதிகபட்சமாக 50 ஓவரில் 399/5 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. அதிகபட்சமாக கில் 104, ஸ்ரேயாஸ் ஐயர் 105, கேஎல் ராகுல் 52, சூரியகுமார் யாதவ் 72* ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 2 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 400 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு மழை குறுக்கே வந்ததால் 33 ஓவரில் 317 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு உருவாக்கப்பட்டது.

- Advertisement -

சாதனை ஜோடி:
இருப்பினும் ஆரம்பத்திலேயே மேத்தியூ ஷார்ட் 9, ஸ்மித் 0 ரன்களில் அவுட்டாகி முடிவை கொடுத்த நிலையில் வார்னர் 53, லபுஸ்ஷேன் 27, அலெக்ஸ் கேரி, சீட் அபௌட் 54 ரன்கள் போராடி எடுத்தும் 28.2 ஓவரில் ஆஸ்திரேலியா 217 ரன்களும் ஆல் அவுட்டானது. அப்படி ஆஸ்திரேலியாவை பந்து வீச்சிலும் மிரட்டிய இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ருதுராஜ் 8 ரன்களில் அவுட்டானதும் 4வது ஓவரில் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் – ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஆரம்பத்திலிருந்து அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தனர். குறிப்பாக காயத்திலிருந்து குணமடைந்த பின் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் இப்போட்டியில் ஃபார்முக்கு திரும்பி அதிரடியாக விளையாடி 11 பவுண்டரி 3 சிக்சருடன் 105 (90) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அவருடன் ஏற்கனவே நல்ல ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் தனது பங்கிற்கு 6 பவுண்டரின் 4 சிக்சருடன் சதமடித்து 104 (97) ரன்கள் குவித்தார். அந்த வகையில் 31 ஓவர்கள் வரை வரை ஆஸ்திரேலிய பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவின் ஆரம்பத்திலேயே உறுதி செய்தது.

இதையும் படிங்க: உலக கிரிக்கெட்டின் அசுரன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக.. அனில் கும்ப்ளேவை முந்திய அஸ்வின் – மாபெரும் சரித்திர சாதனை

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரு போட்டியில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற சச்சின் – லக்ஷ்மன் ஜோடியின் 12 வருட சாதனையை உடைத்துள்ள அவர்கள் புதிய வரலாறு படைத்துள்ளனர். அந்த பட்டியல்:
1. சுப்மன் கில் – ஸ்ரேயாஸ் ஐயர் : 200, இந்தூர், 2023*
2. சச்சின் டெண்டுல்கர் – விவிஎஸ் லக்ஷ்மன் : 199, இந்தூர், 2001
3. ரோகித் சர்மா – ஷிகர் தவான் : 193, மொஹாலி, 2019

Advertisement