உலக கிரிக்கெட்டின் அசுரன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக.. அனில் கும்ப்ளேவை முந்திய அஸ்வின் – மாபெரும் சரித்திர சாதனை

Anil Kumble
- Advertisement -

ஐசிசி 2023 உலகக்கோப்பை இறுதிக்கட்டமாக தயாராகும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே 2 – 0* என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியுள்ளது. குறிப்பாக இந்தூரில் நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக 399/5 ரன்கள் குவித்தது.

அதை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு மேத்தியூ ஷார்ட் 9, கேப்டன் ஸ்மித் 0 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை ஏற்படுத்தினர். அதை தொடர்ந்து மழை வந்ததால் 33 ஓவரில் 311 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கை சேசிங் செய்த அந்த அணிக்கு லபுஸ்ஷேனை 27 ரன்களில் தன்னுடைய மாயாஜால சுழலால் கிளீன் போல்டாக்கிய அஸ்வின் மறுபுறம் அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னரை 53 ரன்களில் அவுட்டாக்கி அடுத்து வந்த ஜோஸ் இங்லீஷையும் 6 ரன்களில் காலி செய்தார்.

- Advertisement -

அஸ்வினின் சாதனை:
அப்படி மழை வந்த பின் 7 பந்துகளில் 3 விக்கெட்டுகளை எடுத்து அஸ்வின் ஏற்படுத்திய அழுத்தத்திற்கு தாக்குபிடிக்க முடியாத ஆஸ்திரேலிய அணிக்கு அலெக்ஸ் கேரி 14, கேமரூன் க்ரீன் 19, சீன் அபௌட் 54 ரன்கள் எடுத்து போராடியும் வெற்றி காண முடியவில்லை. அதனால் 28.2 ஓவரில் ஆஸ்திரேலியாவை 217 ரன்களுக்கு சுருட்டி பெரிய வெற்றியைக் கண்ட இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

அதிலும் குறிப்பாக இத்தொடரில் கம்பேக் கொடுத்த அஸ்வின் கடந்த போட்டியில் 611 நாட்கள் கழித்து முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் விக்கெட் எடுத்த நிலையில் இந்த போட்டியில் 7 ஓவரில் 41 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதை விட 5 உலகக் கோப்பைகளை வென்று கிரிக்கெட்டின் அசுரனாக கருதப்படும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து அஸ்வின் இதுவரை மொத்தம் 144 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

- Advertisement -

இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்து வீச்சாளர் என்ற ஜாம்பவான் அனில் கும்ப்ளே சாதனையை உடைத்த அவர் மாபெரும் புதிய சரித்திர சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரவிச்சந்திரன் அஸ்வின் : 144*, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக
2. அனில் கும்ப்ளே : 142, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக
3. கபில் தேவ் : 141, பாகிஸ்தானுக்கு எதிராக
4. அனில் கும்ப்ளே : 135, பாகிஸ்தானுக்கு எதிராக
5. கபில் தேவ் : 132, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக

இதையும் படிங்க: சிக்ஸர் மழை பொழிந்த பேட்ஸ்மேன்கள்.. ஒருநாள் கிரிக்கெட்டில் வேறு எந்த அணியும் செய்யாத இரட்டை சாதனை படைத்த இந்திய அணி

அந்த வகையில் கம்பேக் தொடரில் மிகச்சிறந்த சாதனையை படைத்துள்ள அஸ்வின் 2023 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் ஆஃப் ஸ்பின்னராக விளையாடுவதற்கு தகுதியானவன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். ஆனாலும் அவருக்கு சில முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement