சிக்ஸர் மழை பொழிந்த பேட்ஸ்மேன்கள்.. ஒருநாள் கிரிக்கெட்டில் வேறு எந்த அணியும் செய்யாத இரட்டை சாதனை படைத்த இந்திய அணி

IND vs AUS Shreays Iyer
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்த அடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 2 – 0* ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்துள்ளது. குறிப்பாக செப்டம்பர் 24ஆம் தேதி இந்தூரில் நடைபெற்ற 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடும் 399/5 ரன்கள் சேர்த்தது.

இந்திய அணிக்கு அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைக்க சுப்மன் கில் 104, ஸ்ரேயாஸ் ஐயர் 105, கேஎல் ராகுல் 52, சூரியகுமார் யாதவ் 72* ரன்கள் குவித்து உதவினர். மறுபுறம் ரன்களை வாரி வழங்கிய ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 400 ரன்களை துரத்தி ஆஸ்திரேலியாவுக்கு மேத்தியூ ஷார்ட் 8, கேப்டன் ஸ்மித் 0 ரன்களில் பிரசித் கிருஷ்ணா வேகத்தில் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

இரட்டை சாதனை:
அப்போது மழை வந்ததால் 33 ஓவரில் 317 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கை துரத்தி ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் டேவிட் வார்னர் 53, லபுஸ்ஷேன் 27, அலெக்ஸ் கேரி 14 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 28.2 ஓவரில் ஆஸ்திரேலியாவை 217 ரன்களுக்கு சுருட்டி வென்ற இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

இந்த வாயிலாக ஆசிய கோப்பையை வெற்றியை தொடர்ந்து ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தியுள்ள இந்திய அணி உலகின் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்து 2023 உலக கோப்பைக்கு தயாராக இருக்கிறோம் என்பதை காட்டியுள்ளது. முன்னதாக மொஹாலியில் நடைபெற்ற கடந்த போட்டியில் ருதுராஜ் 71, கில் 74, ராகுல் 58, சூரியகுமார் யாதவ் 50 என 4 பேட்ஸ்மேன்கள் 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.

- Advertisement -

அதே போல இந்த போட்டியில் கில் 104, ஸ்ரேயாஸ் ஐயர் 105, கேஎல் ராகுல் 52, சூரியகுமார் யாதவ் 72* என 4 பேட்ஸ்மேன்கள் 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து வெற்றியில் பங்காற்றினர். உலகிலேயே இப்படி அடுத்தடுத்த 2 ஒருநாள் போட்டிகளில் 4 பேட்ஸ்மேன்கள் 50க்கும் மேற்பட்ட ரன்களை அடிப்பது இதுவே முதல் முறையாகும். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அடுத்தடுத்த 2 போட்டிகளில் தலா பேட்ஸ்மேன்கள் 50க்கும் மேற்பட்ட ரன்களை பதிவு செய்த முதல் அணி என்ற சாதனையை இந்திய படைத்துள்ளது.

இதையும் படிங்க: IND vs AUS : அவரோட இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. நான் என் கேம் ஆடுறேன் அவ்ளோதான் – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

அதை விட இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் சேர்ந்து மொத்தம் 18 சிக்ஸர்கள் அடித்தனர். இதையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் 3000க்கும் சிக்ஸர்களை அடித்த முதல் அணி என்ற மாபெரும் உலக சாதனை இந்தியா படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. இந்தியா : 3007*
2. வெஸ்ட் இண்டீஸ் : 2953
3. பாகிஸ்தான் : 2566
4. ஆஸ்திரேலியா : 2476
5. நியூசிலாந்து : 2387

Advertisement