IND vs AUS : அவரோட இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. நான் என் கேம் ஆடுறேன் அவ்ளோதான் – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

Shreyas-Iyer
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று இந்தூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்களை குவித்தது.

இந்திய அணி சார்பாக சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சதமும் கே.ராகுல் மற்றும் சூரியகுமார் யாதவ் அரைசதமும் குவித்து அசத்தினர். பின்னர் 400 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது மழை குறிக்கிட்டதன் காரணமாக 33 ஓவர்களில் 317 ரன்களை குவிக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

- Advertisement -

அதன்படி தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 28.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 217 ரன்களை மட்டுமே குவித்து 99 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் 3 ஆவது வீரராக களமிறங்கி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த போட்டியில் 90 பந்துகளை சந்தித்த அவர் 11 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 105 ரன்கள் குவித்து அசத்தினார்.

இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய ஆட்டநாயகன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : என்னுடைய இந்த பயணம் ரோலர் கோஸ்டர் போல இருந்தாலும் பிரமாதமாக இருக்கிறது. என்னுடைய அணி வீரர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் ஆதரவாக நிற்கின்றனர்.

- Advertisement -

நான் டிவியில் போட்டிகளை பார்க்கும்போது மனம் வருந்தியது. நான் அணியுடன் இணைந்து விளையாட வேண்டும் என்ற ஆசையும் தோன்றியது. அந்த வகையில் இன்றைய போட்டியில் இணைந்து விளையாடியது மகிழ்ச்சி. மேலும் காயம் என்பது எளிதாக அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று தான். ஆனால் அதிலிருந்து வெளியே வந்து எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை பயிற்சியின் மூலம் கற்றுக் கொள்ளலாம்.

இதையும் படிங்க : வீடியோ : வலது கை பேட்ஸ்மேனாக மாறி ஃபோர் அடித்த வார்னர்.. சிரித்த ஆஸி அணியினர்.. அடுத்த ஓவரிலேயே மாஸ் காட்டிய அஸ்வின்

இன்றைய போட்டியில் நான் விளையாட சென்றபோது எந்த ஒரு விடயத்தையும் சிரமமாக எடுத்துக் கொள்ளாமல் என்னுடைய பங்களிப்பினை வழங்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை மட்டும் வைத்துக் கொண்டேன். அதேபோன்று இந்திய அணி எங்கு என்னை களமிறங்க வேண்டும் என்று சொன்னாலும் அந்த இடத்தில் களமிறங்கி எனது பங்களிப்பை வழங்க முடியும். விராட் கோலி ஒரு மிகச்சிறந்த பிளேயர். அவரது இடத்தை யாராலும் பறிக்க முடியாது. நம்பர் மூன்று விராட் கோலியின் இடம் தான். நான் எந்த இடத்தில் களமிறங்கினாலும் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement