புதுவருஷம் பொறந்து 10 நாள்ல இப்படி ஒரு சாதனையா? கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்த – சுப்மன் கில்

Shubman Gill
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது இன்று இந்தூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றிய வேளையில் இன்று தங்களது மூன்றாவது ஆட்டத்தில் விளையாடி வரும் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 385 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியுள்ளது.

Rohit sharma IND vs NZ

- Advertisement -

இந்திய அணி சார்பாக துவக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். ரோகித் சர்மா 101 ரன்களும், சுப்மன் கில் 112 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். பின்னர் பின் வரிசையில் ஹார்டிக் பாண்டியா அரை சதம் கடந்தார். அனைவரது சிறப்பான பங்களிப்பின் காரணமாக இந்திய அணி 385 ரன்கள் என்கிற மாபெரும் ரன் குவிப்பை வழங்கி உள்ளது.

அதனை தொடர்ந்து 386 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் சதம் அடித்த சுப்மன் கில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஏகப்பட்ட சாதனைகளுக்கு சொந்தக்காரராக மாறி உள்ளார். அந்த வகையில் இன்று தனது நான்காவது சதத்தை அவர் பதிவு செய்துள்ளார்.

Shubman Gill 1

ஏற்கனவே இந்த தொடரின் முதல் போட்டியில் இரட்டை சதம் அடித்த அவர் தற்போது இந்த தொடரின் மூன்றாவது போட்டியிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் குறைந்த இன்னிங்ஸ்களில் 4 சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் அவர் நான்காவது வீரராக இடம் பிடித்துள்ளார். இந்திய அணி சார்பாக ஏற்கனவே ஷிகார் தவான் 24 இன்னிஸ்களில் நான்கு சதங்கள் அடித்திருந்த வேளையில் அவரது சாதனையை இன்று முறியடித்த சுப்மன் கில் 21 இன்னிங்ஸ்களிலேயே நான்கு சதங்களை அடித்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன்களை அடித்த வீரராக முதலிடத்தில் இருந்த பாபர் அசாமின் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். இந்த தொடரில் மூன்று போட்டியில் விளையாடியுள்ள கில் 360 ரன்களை குவித்துள்ளார். பாபர் அசாமும் மூன்று 360 ரன்களை 3 போட்டிகளில் குவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று இந்த 2023-ஆம் ஆண்டு துவங்கி 24 நாட்கள் தான் ஆகிறது அதற்குள் மூன்று சர்வதேச ஒருநாள் சதங்களை பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க : வீடியோ : ஒரே ஓவரில் 22 ரன்களை விளாசிய சுப்மன் கில், ரோஹித் வியப்பு – சதமடித்து ஷிகர் தவானின் சாதனையை தகர்ப்பு

அதுமட்டும் இன்றி ஜனவரி 15-ஆம் தேதி முதல் ஜனவரி 24-ஆம் தேதி வரை கணக்கில் கொண்டால் அவர் 10 நாட்களுக்குள்ளேயே மூன்று ஒருநாள் சதங்களை அடித்துள்ளார். அதுமட்டுமின்றி 21 சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ள சுப்மன் கில் தற்போது 73 ரன்கள் சராசரியுடன் 1254 ரன்களை குவித்துள்ளார். இதில் 5 அரை சதங்களும் நான்கு சதங்களும் அடங்கும்.

Advertisement