ஒரே ஓவரில் 22 ரன்களை விளாசிய சுப்மன் கில், ரோஹித் வியப்பு – சதமடித்து ஷிகர் தவானின் சாதனையை தகர்ப்பு

Shubman gill
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்தியா முதலிரண்டு போட்டியில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. மறுபுறம் உலகின் நம்பர் ஒன் அணியாக களமிறங்கிய நியூசிலாந்து அடுத்தடுத்து தோல்விகளால் 2வது இடத்திற்கு சரிந்த நிலையில் இத்தொடரின் சம்பிரதாய கடைசி கிரிக்கெட் போட்டி ஜனவரி 24ஆம் தேதியன்று மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் மதியம் 1.30 மணிக்கு துவங்கியது. அதில் ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்புடன் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு தற்சமயத்தில் அற்புதமான பார்மில் இருக்கும் சுப்மன் கில் அதிரடியான பவுண்டரரிகளை பறக்க விட்டு விரைவாக ரன்களை சேர்த்தார். அவருக்கு நானும் சளைத்தவன் அல்ல என்பது போல் பேட்டிங்க்கு சாதகமாக இருந்த மைதானத்தில் சுமாராக பந்து வீசிய நியூசிலாந்து பவுலர்களை வெளுத்து வாங்கிய ரோகித் சர்மா தனது பங்கிற்கு அதிரடியாக ரன்களை சேர்த்தார். அதனால் இவர்களை பிரிப்பதற்கு நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் போட்ட அத்தனை திட்டங்களையும் உடைத்த இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அரை சதம் கடந்தும் அவுட்டாகாமல் அடம் பிடித்து மேலும் அதிரடியாக ரன்களை சேர்த்தது.

- Advertisement -

கலக்கும் கில்:
நேரம் செல்ல செல்ல நன்கு செட்டிலாகி அசால்ட்டாக பவுண்டரிகளை பறக்க விட்ட இந்த ஜோடியில் இருவருமே ஒரே சமயத்தில் 90 ரன்களை கடந்து யார் முதலில் சதமடிப்பார் என்பது போல் பேட்டிங் செய்தனர். அதில் சமீப காலங்களாகவே நல்ல தொடக்கத்தை பெற்றும் அவுட்டாகி விமர்சனங்களை சந்தித்த ரோகித் சர்மா ஒரு வழியாக 507 நாட்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 30ஆவது சதத்தை விளாசி 212 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 9 பவுண்டரி 6 சிக்ஸருடன் 101 (85) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

மறுபுறம் அவரை விட அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் 13 பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்து 112 (78) ரன்கள் விளாசி அவுட்டானார். அவரது அதிரடியால் இந்தியா 300 ரன்கள் கடந்து விளையாடி வருகிறது. கடந்த 2019இல் அறிமுகமாகி ஆரம்பத்தில் சுமாரான செயல்பாடுகள் மற்றும் காயத்தால் வெளியேறிய அவர் 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் அணி கோப்பையை வெல்லும் அளவுக்கு அதிக ரன்கள் குவித்து அசத்தியதால் மீண்டும் இந்திய அணியில் கம்பேக் கொடுத்தார். அதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற அடுத்தடுத்த தொடர்களில் தொடர் நாயகன் விருது வென்று அசத்திய அவர் இத்தொடரின் முதல் போட்டியில் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரராக சாதனை படைத்தார்.

- Advertisement -

அப்படி ஆரம்ப காலத்திலேயே அபாரமாக செயல்பட்டு வரும் அவர் இதுவரை விளையாடிய 21 இன்னிங்ஸில் 4 சதங்களை அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 4 சதங்களை அடித்த இந்திய வீரர் என்ற சிகர் தவான் சாதனையை தகர்த்துள்ள அவர் புதிய சாதனையும் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சுப்மன் கில் : 21 இன்னிங்ஸ்*
2. ஷிகர் தவான் : 24 இன்னிங்ஸ்
3. கேஎல் ராகுல் : 31 இன்னிங்ஸ்
4. விராட் கோலி : 33 இன்னிங்ஸ்
5. கெளதம் கம்பீர் : 44 இன்னிங்ஸ்

அத்துடன் கடந்த மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் சதமடித்த அவர் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரது வரிசையில் இந்திய பேட்டிங் துறையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக தண்ணீர் நிரூபித்து வருகிறார். முன்னதாக இப்போட்டியில் நியூசிலாந்தின் அதிரடி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான லாக்கி பெர்குசன் வீசிய 8வது ஓவரில் 4, 0, 4, 4, 4, 6 என 22 ரன்களை தெறிக்க விட்ட சுப்மன் கில் கடைசி பந்தில் சிக்சர் அடித்த போது எதிர்ப்புறமிருந்த ரோகித் சர்மா “என்னப்பா சிக்ஸர் அடிப்பதில் நமக்கே டஃப் கொடுப்பார் போல” என்ற வகையில் வியந்து பார்த்தார்.

இதையும் படிங்க: IND vs NZ : 507 நாட்கள் கழித்து விமர்சனங்களை நொறுக்கிய ரோஹித் சர்மா – ரிக்கி பாண்டிங் சாதனை சமன், கொண்டாடிய கோலி

ஏற்கனவே முதல் போட்டியில் 182 ரன்களில் இருந்த போதும் இதே பவுலருக்கு எதிராக ஹாட்ரிக் சிக்ஸர்களை தெறிக்க விட்ட சுப்மன் கில் வெறித்தனமாக இரட்டை சதத்தை விளாசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement